ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 16, 2025

படுக்கை அறை காட்சியில் எல்லை மீறும் ராஜாராணி2 ஜோடி.. என்ன இப்படி இறங்கிட்டாங்க!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் வில்லியான அர்ச்சனா தன்னுடைய கணவர் செந்திலை அழைத்துக்கொண்டு அர்ச்சனாவின் அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் என்று பொய் சொல்லி வீட்டில் இருப்பவர்களை நம்ப வைத்து குற்றாலம் சென்று குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அதிலும் அர்ச்சனா லாட்ஜ் ஒன்றில் இரண்டு நாட்களுக்கு ரூம் எடுத்து செந்திலுடன் தங்கிக் கொண்டிருக்கிறார். உண்மையில் அர்ச்சனா தன்னுடைய வயிற்றில் வளரும் கருவை யாருக்கும் தெரியாமல் கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குற்றாலத்திற்கு செந்திலை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் அர்ச்சனா செந்திலை கருக்கலைப்பிற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்பதால், கணவருடன் அரைகுறை உடையில் லாட்ஜில் அவர்களது ரூமில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் அந்த லாட்ஜுக்கு வரும் போலீஸ் ரூமில் தங்கி விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்கிறது.

எனவே அவர்களுடன் சேர்த்து அர்ச்சனா-செந்தில் இருவரும் போலீசிடம் சிக்கி விடுகின்றனர். அர்ச்சனா வீட்டில் பொய் சொல்லி குற்றாலம் சென்றிருக்கும் தகவலை அர்ச்சனாவின் தங்கை பிரியாவின் மூலம் அறிந்துகொண்ட சந்தியா, போலீசில் மாட்டிக்கொண்ட அர்ச்சனா-செந்தில் இருவரையும் போலீசாரிடம் பேசி சந்தியா விடுவிக்கிறார்.

அதன் பிறகு அர்ச்சனா தான் சிவகாமியை போலீஸில் சிக்க வைத்ததை சந்தியா ஒத்துக்கொள்ள வைக்கிறார். இவ்வாறு ராஜா ராணி2 சீரியலில் விறுவிறுப்பான சம்பவங்கள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

archana
archana

அத்துடன் ராஜா ராணி2 சீரியல் ஆனது எல்லைமீறும் அளவுக்கு செந்தில்-அர்ச்சனா நெருக்கமாக அரைகுறை ஆடையில் ஓவர் கவர்ச்சி காட்டுவதாக சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

raja-rani2-cinemapettai82
raja-rani2-cinemapettai82

Trending News