அந்த சர்ச்சை நடிகருடன் செய்த ரொமன்ஸ் பிடித்திருந்தது.. ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசனின் காதலன்

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன் பிரபாஸ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் சலார் திரைப்படத்தை கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார்.

தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி கொண்டிருக்கிற இந்த திரைப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மெகா154வது திரைப்படத்திலும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில் தனக்குப் பிடித்தமான பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். மேலும் தான் காதலித்து வரும் சாந்தனு ஹசாரிக்காவை பற்றியும் பேசியுள்ளார். அதில் தனக்கு பிடித்தமான கலர் கருப்பு நிறம்தான் என்றும் தான் அணியும் புடவைகளில் முதலில் நான் கருப்பு நிறத்தை தான் செலக்ட் பண்ணுவேன் என்று தெரிவித்துள்ளார் .

மேலும் இங்கிலாந்தின் பிரபல கோத் இசைக்குழுவினர் கருப்பு நிறம் தான் அணிந்து கொள்வர் ஆகவே எனக்கு அந்த இசை குழுவும் மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார். தற்போது தன்னுடைய
காதலனான சாந்தனு ஹசாரிக்காவின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த ஸ்ருதிஹாசன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார். அதில் முக்கியமாக தன் காதலனுக்கு லிப் லாக் அடிக்கும் வீடியோவும் வெளியிடப்பட்டு வைரல் ஆனது.

இந்த நிலையில் தன் காதலனுக்கு தான் நடித்த திரைப்படங்களில் பிடித்தமான திரைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். தெலுங்கில் 2021 ஆம் ஆண்டு நடிகர் ரவி தேஜாவுடன் ஜோடியாக நடித்த கிராக் திரைப்படம் மற்றும் தமிழில் 2012ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படமும் சாந்தனுற்கு பிடித்தமான திரைப்படங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ருதிஹாசன் தன் கையில் இருக்கும் திரைப்படங்களை முடித்துவிட்டு கூடிய விரைவில் தன் அப்பா கமலஹாசனின் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.