Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இதற்குதானே ஆசைப்பட்டாய் ஸ்ருதிஹாசன்.. தேவை இல்லாமல் தலையை கொடுத்த லோகேஷ்

இதற்குதானே ஆசைப்பட்டாய் ஸ்ருதிஹாசன்.. தேவை இல்லாமல் தலையை கொடுத்த லோகேஷ்

Shruti Haasan will get a film opportunity through inimel an album song: தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் உலக நாயகன் கமலஹாசனின் மகள் என்று அடையாளத்துடன் வலம் வருபவர் ஸ்ருதிஹாசன்.  வாழ்க்கை வாழ்வதற்கு […]

Shruti Haasan will get a film opportunity through inimel an album song: தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் உலக நாயகன் கமலஹாசனின் மகள் என்று அடையாளத்துடன் வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். 

வாழ்க்கை வாழ்வதற்கு தான் என்பது போல் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல்  சுதந்திரபறவையாக துள்ளித் திரிந்து வருகிறார் ஸ்ருதி.

தெலுங்கு படங்களில் நடிக்கும் போது சித்தாத்துடன் கிசுகிசுக்கப்பட்ட ஸ்ருதிஹாசன் பல்வேறு காரணங்களால் இருவருக்கும் பிரேக் அப் என்று சொல்லப்பட்டது.

பின் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை காதலித்தார்  அவருடனும் பிணக்கு ஏற்பட்ட நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்தவர், பின் சாந்தனு ஹசாரிகா என்பவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் மும்பையில் லிவ்விங் டுகெதரில் ஒன்றானார்.

முரண்பட்ட  மனிதர்களை ஒதுக்கி முரணான வாழ்க்கையில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன், எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை வெட்ட வெளிச்சமாக்கி துணையுடன் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இப்பொழுது சில நாட்களாக இந்த மாதிரியான புகைப்படங்கள் வெளிவரவில்லை. அதனால் அவரது காதலருடன் பிரேக் அப் என்கிற மாதிரி செய்திகள் வெளியாகிறது.

வாழ்க்கையிலும் நஷ்டம் சினிமாவிலும் நஷ்டம் என்ற போது வந்தது தான் “இனிமேல்” வீடியோ. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஸ்ருதி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து நடித்த ஆல்பம் சாங் தான் இனிமேல்.

வேற லெவல் ஹிட்டான “இனிமேல்” ஆல்பம் சாங்

ஆல்பம் சாங்கில்  நடிக்க மறுத்த லோகேஷை கமலின் வற்புறுத்தலால் பாடல் கேட்க வைத்து, நடிக்க வைத்து, ஹிட்டாகவும் செய்து விட்டார் ஸ்ருதி. 

வழக்கமான ஆல்பம் சாங் போல் இல்லாமல் லோகேஷ் நடித்ததாலேயே,  அதிக கியூரியாசிட்டியுடன் பலராலும் விரும்பி பார்க்கப்பட்டது இந்த ஆல்பம் சாங்.

இதனை பார்த்த அனைவரும் லோகேஷா இது? என்பது போல் ஆச்சரியத்துடன் எதிர்மறையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். சும்மா இருந்த மனுசன நடிக்க வைத்து பெயரை கெடுத்து விட்டார் ஸ்ருதி.

ஆனால் அவர் நினைச்சது போல ரெண்டு இயக்குனர்கள் அவர்களது படத்திற்கு நடிக்க ஸ்ருதியை அணுகி உள்ளார்கள். 

பாடல் வெளியிட்ட போது பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்ருதி, லோகேசை பார்த்து இவரை லவ் பண்ணாத பொண்ணுங்களே இல்லை. ஆண்களும் கூட இவரை லவ் பண்ணுகிறார்கள் என்று எதற்கோ கொக்கி போடுவது போல் தெரிகிறது. 

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.