திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

இறங்கி அடிக்கும் லெஜெண்ட் அண்ணாச்சி.. செகண்ட் இன்னிங்ஸில் ஷ்யாம் காட்டில் கொட்டும் அடைமழை

2022யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சரவணன் அருள் அண்ணாச்சியின் “தி லெஜன்ட்” படம் களமிறங்கியது. அவர் நடிக்க வந்த புதிதில் ஏராளமானோர் ஏளனம் செய்தனர். ஆனால் அதை எல்லாம் பொறுப்பெடுத்தாமல் “தி லெஜன்ட்” படத்தில் பட்டையை கிளப்பினார்.

இவருடன் நடிக்க பல ஹீரோயின்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் ஊர்வசி ரௌடேலா என்னும் விளம்பர மாடல் அவருக்கு ஜோடியாக நடித்தார். படம் கிராமத்து தியேட்டர்களில் ஓரளவு வசூலை பெற்று தந்தது. இப்பொழுது அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் அண்ணாச்சி.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் சரவணன் அண்ணாச்சி. இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது அந்த அளவிற்கு மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் அடுத்த படத்தின் சூட்டிங்காக தூத்துக்குடி வந்தடைந்தார் அண்ணாச்சி

செகண்ட் இன்னிங்ஸில் ஷ்யாம் காட்டில் கொட்டும் அடைமழை

சரவணன் அருள் தூத்துக்குடி ஏர்போர்ட்டில் பத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுத்துள்ளார், தனது அடுத்த படத்தின் சில அப்டேட்டுகளையும் அவர் கொடுத்துள்ளார். படக்குழுவினருடன் தூத்துக்குடி வந்தடைந்தவர் படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திர கெட்டபிலேயே பேட்டி கொடுத்துள்ளார்.

துரை செந்தில்குமார் இந்த படத்தில் இயக்குவதாகவும், ஷியாம் மற்றும் ஆண்ட்ரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறினார். ஆக்சன் திரில்லர் படமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவரப்போகிறதாம். இரண்டாவது இன்னிங்ஸில் ஷியாம் பல படங்களில் தலை காட்டுகிறார். அண்ணாச்சி படம் என்றால் எப்படியும் தனது கல்லாவை நிரப்பி இருப்பார்.

Trending News