புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வட்டத்தை விட்டு வளர முடியாமல் கஷ்டப்படும் சிபி.. சத்தமே இல்லாமல் எடுத்த விஸ்வரூபம்

சினிமா பின்னணியில் இருந்து வரும் அத்தனை வாரிசு நடிகர்களுக்கும் சினிமா வாய்ப்பு அவ்வளவு எளிதில் ஒர்க் அவுட் ஆகி விடாது. சிலருக்கு அது எட்டாக் கனியாகவே இருந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருப்பவர் தான் நடிகர் சிபிராஜ்.

இவரின் அப்பா சத்யராஜ் தற்போது பல மொழிகளிலும் பிரபலமாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவரோ அவ்வப்போது நானும் ஒரு நடிகர்தான், என்னை மறந்து விடாதீர்கள் என்று அனைவருக்கும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் இவருடைய படங்களும் எப்போவாவது ரிலீஸ் ஆகி கொண்டு இருந்தது.

ஆனால் அவை அனைத்தும் ரசிகர்களை கவர்ந்ததா என்று கேட்டால் அது சந்தேகம்தான். இவருடைய படங்கள் அனைத்தும் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு வட்டத்திற்குள் தான் இவர் இருக்கிறார். அதாவது இந்த ரயில் இங்குதான் போகும் என்பது போல அவர் மீது ஒரு முத்திரை இருக்கிறது.

தற்போது அதை எல்லாம் உடைத்துக்கொண்டு வெளியே வருவதற்கு அவர் தயாராகிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து புது புது இயக்குனர்களிடம் அவர் பல கதைகளை கேட்டு வருகிறார். அதில் சிலவற்றை ஓகே செய்து வைத்திருக்கிறார்.

இவரின் நடிப்பில் அடுத்து மாயோன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்த திரைப்படத்தை தான் சிபி மலைபோல் நம்பி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வட்டம், ரேஞ்சர், ரங்கா போன்ற திரைப்படங்களும் அவருடைய கைவசம் இருக்கிறது.

இவை எல்லாம் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கிறது. இதோடு அவர் பல கதைகளையும் ஓகே செய்து நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இதை வைத்து பார்க்கும் பொழுது இவர் ஒரு முடிவோடுதான் இருக்கிறார் என்று தெரிகிறது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல சிபிராஜ் சத்தமே இல்லாமல் ஒரு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

Trending News