புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஜோடி போட்டு வரும் சித்தார்த் அஞ்சனா.. உள்ளே புகுந்து ஆட்டையை கலைத்த கரிகாலன், அடாவடியாக இறங்கிய கதிர்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினியை பொண்ணு மாதிரி அலங்கரித்து கோவிலுக்கு கூட்டிட்டு போகிறார்கள். கூடவே குணசேகரன், உமையாள், கீர்த்தி மற்றும் நந்தினியும் போகிறார்கள்.

போகும் வழியில் கரிகாலன் ஆவேசமாக வாயில் அருவாவை வைத்து குணசேகரனின் காரை மறைத்து நிற்கிறார். ஆனால் குணசேகரன் ரொம்பவே தெனாவட்டாக அவர் மீது காரை ஏற்றிவிட்டு போங்க என்று சொல்கிறார்.

இதைக் கேட்டும் கொஞ்சம் கூட பயப்படாத கரிகாலன் அப்படியே அஞ்சா சிங்கம் போல் நிற்கிறார். அதன் பின் குணசேகரன் காரை விட்டு இறங்கி கரிகாலனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டுப் போகிறார்.

வந்த ஸ்பீடுக்கு வேலையில் ஒன்றும் காட்டாமல் வெத்து வேட்டாக கரிகாலன் நின்று விடுகிறார். பிறகு இவர்கள் அனைவரும் கோவிலுக்கு போன நிலையில் சித்தார்த் எங்கே என்று கேட்டு குணசேகரன் உமையாளுக்கு குடைச்சல் கொடுக்கிறார்.

உடனே உமையாள் இப்ப வந்துருவான் அண்ணா என்று சொல்லி சமாளித்து விடுகிறார். அதன் பின் மறைவாக போய் நின்று ராமசாமிக்கு போன் பண்ணி என்ன ஆச்சு இன்னும் சித்தார்த் வரவில்லை என்று கேட்கிறார்.

அவமானப்படப்போகும் அண்ணன் தங்கை

அதற்கு கொஞ்ச நேரத்தில் சித்தார்த் வந்து விடுவான் நீங்கள் ஆக வேண்டிய வேலையை பாருங்கள் என்று கூறுகிறார். இதற்கிடையில் சக்தி, கதிரிடம் நாங்கள் தான் சித்தார்த்தை கடத்தி வைத்திருக்கிறோம்.

ஒழுங்கு மரியாதையா ஜனனியையும் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள் என்று சொன்னால் அவர்கள் விட்டுவிடுவார்கள் என்று கதிரிடம் சொல்கிறார். அதற்கு கதிர் பொறுமையாக இரு அவர்களே, ஜனனியை விடும் மாதிரி நான் ஒரு சம்பவத்தை செய்யப்போகிறேன் என்று சொல்கிறார்.

ஆக மொத்தத்தில் கதிர் ஏதோ ஒரு அடாவடியான விஷயத்தை கையில் வைத்திருக்கிறார் போல தெரிகிறது. அதே நேரத்தில் தர்ஷினி கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று கரிகாலன் உள்ளே புகுந்து ஆட்டையை கலைக்க போகிறார்.

எப்படியும் இவர்கள் கல்யாணம் நடக்க போறது கிடையாது. ஆனால் அதற்கு பதிலாக சித்தார்த் மற்றும் அஞ்சனாவின் கல்யாணம் நடக்கப் போகிறது. இதன் மூலம் குணசேகரன் மற்றும் உமையாள் அவமானத்தில் கூனி குறுகி போய் நிற்கப் போகிறார்கள்.

Trending News