சித்தார்த் சென்னையில் பிறந்தவர் என்றாலும் வளர்ந்தது எல்லாம் டெல்லியில் தான். அங்கே 2003 ஆம் ஆண்டு சிறுவயது தோழி மேக்னா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவரும் 2007 இல் விவாகரத்தும் பெற்று விட்டார்கள்.
மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்தார்த்.அதன் பின் பிரமாண்ட இயக்குனர் சங்கரின் பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். இன்று முழு நேர ஹீரோவாகி நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து சினிமாவில் நடித்த வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம் மிஸ் யூ.
இதற்கு முன்னர் இந்தியன் 2 மற்றும் சித்தா ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் சித்தா படம் இவருக்கு சூப்பர் ஹிட் ஆனது. இப்பொழுது மிஸ் யூ படம் இவருக்கு பெரிய அடியாய் அமைந்துள்ளது. இந்த படம் சரியாக போகவில்லை, மொத்தமாக 47 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. சித்தா படத்தால் எகிரிய எதிர்பார்ப்பை இந்த படத்தில் புஷ்ஷாக்கி விட்டார்
இதற்கு முன்னர் சித்தார்த் நடித்த சித்தா படம் தமிழ்நாட்டில் ஷேர் மட்டும் மூன்றரை கோடிகள் கொடுத்துள்ளது. மிஸ் யூ படம் டோட்டலா இவரை டேமேஜ் செய்துள்ளது. அதிக எதிர்பார்ப்பில் வெளிவந்த இந்த படத்திற்கு முன்னர் இவர் கொடுத்த பேட்டி தான் இந்த சரிவுக்கு காரணம்.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 பட புரமோஷன் பாட்னாவில் நடைபெற்றது. அங்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் கூடி அந்த பிரமோஷன் வேறு லெவலில் சென்றது. இதைப் பற்றி சித்தார்த்திடம் கேட்டதற்கு இந்த நாட்டில் இதற்கெல்லாம் கூட்டம் கூடுவது அபத்தமானது என பேசி விட்டார்.
சக நடிகர் பற்றி இப்படி பேசியது மட்டுமல்லாது. இதற்கு முன்னர் பல விஷயங்களில் அவர் முரணான கருத்துக்களை சொல்லி வசமாக சிக்கிக் கொண்ட சம்பவங்களுக்கு இருக்கிறது. இது கூட “மிஸ் யூ” படம் ஓடாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.