வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

உதயநிதி ஹீரோயினை நவட்டிக்கிட்டு போன சித்தார்த்.. கையும் களவுமா மாட்டிய மச்சக்கார மாப்பிள்ளை

தமிழில் பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர் சித்தார்த் சர்ச்சைக்கு பெயர் போனவர். சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு கருத்தை கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது தான் இவருடைய வேலையே. அந்த வகையில் தற்போது இவர் பற்றிய ஒரு விஷயம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது சித்தார்த் பிரபல ஹீரோயின் ஒருவருடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறாராம். ஏற்கனவே இவர் நடிகை திரிஷாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆயுத எழுத்து திரைப்படத்தில் திரிஷாவுடன் நடித்த அவர் தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதனால் அவர்கள் இருவர் குறித்தும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வெளிவந்தது. அதை தொடர்ந்து இவர் நடிகை சமந்தாவுடன் காதலில் இருந்தார். பொதுவெளியில் பல இடங்களில் இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியது.

அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளும் வரை வந்த இவர்கள் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விட்டனர். அதற்கடுத்து சில காலங்கள் சித்தார்த், ஸ்ருதிஹாசனுடன் நட்பில் இருந்தார். இவர்களைப் பற்றியும் ஏகப்பட்ட வதந்திகள் பரவியது.

இந்நிலையில் சித்தார்த் தற்போது நடிகை அதிதி ராவுடன் மும்பையில் டேட்டிங் செய்து கொண்டிருக்கிறாராம். இவர் தமிழில் காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் உதயநிதிக்கு ஜோடியாக சைக்கோ திரைப்படத்திலும் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஹிந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் சித்தார்த்துடன் அடிக்கடி வெளியில் சுற்றி வருகிறாராம். இவர்கள் இருவரும் தெலுங்கில் மகா சமுத்திரம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இவர்கள் ஏ ஆர் ரகுமானின் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் கூட ஒன்றாக கலந்து கொண்டனர். இதுவே இவர்கள் குறித்து பல வதந்திகளை கிளப்பியது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் இவர்கள் இருவரும் மும்பையில் பல இடங்களில் ஒன்றாக சென்று வருகிறார்களாம்.

மேலும் இவர்கள் இருவரையும் பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்க முயற்சித்த போது கூட சித்தார்த் எடுக்க கூடாது என்று கோபமாக கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் தங்களின் காதலைப் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Trending News