வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கிசுகிசுவை உண்மையாக்கிய சித்தார்த்.. அம்பலமான காதல் ரகசியம்

சினிமாவில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் தான் சித்தார்த். சமூக வலைத்தளங்களில் தேவையில்லாமல் எதையாவது பேசி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொள்வது தான் இவருடைய வேலையே. இப்படி பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து இருக்கும் இவர் சமீப காலமாக எந்த வம்பு தும்பிலும் சிக்காமல் இருக்கிறார்.

ஆனாலும் இவரைப் பற்றிய கிசுகிசுகளுக்கு குறைவில்லை. கடந்த சில மாதங்களாகவே இவர் நடிகை அதிதி ராவை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்தது. அதற்கு ஏற்ற போல் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பல இடங்களில் சுற்றி திரிந்த போட்டோக்களும் வைரலானது.

Also read:பொன்னியின் செல்வன் விழாவில் சேட்டை செய்த சித்தார்த்.. அரங்கத்தை திரும்பிப் பார்க்க வைத்த திரிஷா

அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் பட ட்ரெய்லர் விழாவில் கூட இவர்கள் இருவரும் ஜோடியாக வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இருந்தே இவர்களுடைய காதல் பற்றி திரையுலகில் ஒரே பேச்சாக கிடந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட இவர்கள் இருவரும் அதைப்பற்றி எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை.

இந்நிலையில் சித்தார்த் அதிதி ராவின் பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய காதலை வெளிப்படையாக உறுதி செய்து இருக்கிறார். தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அவர் எனது இதய ராஜகுமாரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு தாங்கள் ஜோடியாக இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்திருக்கிறார்.

Also read:திருமணம் வரை சென்று 3 நடிகைகளை கழட்டிவிட்ட சித்தார்த்.. நான்காவதாக சிக்கிய அமுல் பேபி

இதன் மூலம் அவர்கள் இருவரின் காதலும் தற்போது உறுதியாகி இருக்கிறது. மேலும் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டும் இன்றி விரைவில் திருமண தேதியையும் கூறுங்கள் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சித்தார்த் வெளியிட்டுள்ள இந்த பதிவு சோசியல் மீடியாவில் அதிக ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே திருமணம், விவாகரத்து, சமந்தாவுடன் காதல் என்று சர்ச்சைகளின் நாயகனாக இருந்த இவர் இந்த காதலையாவது திருமணம் வரை கொண்டு செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also read:சித்தார்த்தை வெறுப்பேற்ற சமந்தா செய்த செயல்.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்

Trending News