Actor Siddharth: நடிகர் சித்தார்த் இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இருந்து, பின்னர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். ஐந்து ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாறி இருந்தாலும் தன்னுடைய சிறந்த நடிப்பினால் இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். ஹீரோவாக மட்டுமில்லாமல் சித்தார்த் பன்முகத் திறமை கொண்ட
சித்தார்த் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்திற்கு பிறகு நீண்ட வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த டக்கர் திரைப்படம் ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் இவர் ரசிகர்களுடன் நேருக்கு நேர் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தினார். இதில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவில் காலடி எடுத்து வைத்து பின்னர் எப்படி ஹீரோவாக மாறினார் என்பதை பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்திருந்தார். மேலும் அவருடைய வெற்றி படங்கள், சொந்த வாழ்க்கை, அடுத்து அவருடைய திட்டம் என பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட இவர், வாழ்க்கையில் தான் தவறவிட்ட மிகப்பெரிய ஹிட் படத்தை பற்றியும் பேசி இருந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்த மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, வசூலையும் அள்ளி குவித்தது. இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது சித்தார்த் தானாம். படத்தின் இயக்குனர் சசி முதலில் அவரிடம் தான் கதையை சொல்லி இருக்கிறார்.
Also Read:சித்தார்தின் டக்கரை பின்னுக்கு தள்ளிய சரத்குமார்.. 2வது நாள் வசூலில் அதிரடி காட்டும் போர் தொழில்
ஆனால் சித்தார்த் கதை புரியவில்லை என்று சொல்லி இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். இதை இயக்குனர் சசி முன்னிலையில் அந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார். மேலும் தன்னிடம் கதை சொல்லும் பொழுது கதையின் கருவை மட்டுமே சொன்னதால் தனக்கு புரியவில்லை எனவும், அதன் பின்னர் கதையை வேறு மாதிரி மாற்றி பிச்சைக்காரன் படத்தை சசி எடுத்து இருக்கிறார் என்றும் விளக்கம் கொடுத்திருந்தார்.
பிச்சைக்காரன் படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, விஜய் ஆண்டனியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. ஒருவேளை சித்தார்த் இந்த படத்தில் நடித்திருந்தால் அவருடைய மார்க்கெட் வேற லெவலுக்கு சென்று இருக்கலாம். தற்போது தமிழில் ஒரு வெற்றிப் படம் கொடுக்க திணறிக் கொண்டிருக்கிறார் இவர். சமீபத்தில் ரிலீசான டக்கர் திரைப்படமும் சித்தார்த்துக்கு காலை வாரிவிட்டது.