சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இதுதான் முக்கியம்ன்னு ஆடியோ லாஞ்சிக்கு சித்தார்த் கொடுத்த டிமிக்கி.. சித்தா பண்ணும் அக்கப்போர்

Bad Attitude of Siddharth: சித்தார்த் எப்பொழுதுமே சமூகத்திற்காக குரல் கொடுக்கிறேன் என்று சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி சமூக வலைத்தளங்களில் ஃடிரெண்ட் ஆவார். ஏற்கனவே சாய்னா விஷயத்தில் இவர் முறையற்ற கருத்துக்களை பேசி பின் மன்னிப்பும் கேட்டார்.

சமீபத்தில் இவர் நடித்த படம் சித்தா. நீண்ட காலமாக படங்களே ஓடாமல் இருந்த சித்தார்த்துக்கு இந்த படம் நல்ல ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. அதன் பின் அவருடைய மார்க்கெட் சற்று உயர்ந்தது. மீண்டும் சினிமாவில் நிறைய படங்களில் கமிட் ஆகி வந்தார்.

2019ஆம் ஆண்டு அருவம் படத்திற்கு பின் இரண்டு வருடங்களாக தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிக்கவில்லை. அதன்பின் “டக்கர்” என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் கை கொடுக்கவில்லை. மோசமான விமர்சனங்களை பெற்று தயாரிப்பாளருக்கு தலைவலி கொடுத்தது.

2023 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படம் சித்தா. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது இவர் நடித்துமுடித்திருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் சித்தார்த். இந்தப் படத்தில் கமலை காப்பாற்றும் முக்கியமான கதாபாத்திரம் பண்ணுகிறாராம்.

சித்தா பண்ணும் அக்கப்போர்

சித்தா படம் ஹிட்டானது, மற்றும் இந்தியன் 2 படம் இவர் நடிப்பில் வெளிவர இருக்கிறது. இப்படி லைம் லைட்டுக்கு வந்த இவர் இப்பொழுது கொஞ்சம் ஆட்டிட்யூட் காட்டி வருகிறாராம். கமல் படத்தில் நடித்ததன் மூலம் அடுத்து நமக்கு நிறைய படங்கள் வரும் என்ற கனவு கோட்டை கட்டி வருகிறார்.

இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச்க்கு வர மறுத்து விட்டாராம். இப்பொழுது தான் இவருக்கு புதிதாக கல்யாணம் நடந்தது. காதல் மனைவி அதிதி ராவுடன் நேரம் செலவழித்து வருகிறார். இருவரும் வெளிநாட்டில் இருக்கின்றனர். ஆரம்பத்தில் கமலுக்கு நிகரான வரவேற்பு கொடுத்தால் தான் வருவேன் என்று அடம் பிடித்துள்ளார் சித்தார்த்.

Trending News