Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அது வீடு இல்ல என்னோட மரியாதை.. மிடில் கிளாஸ் மனிதனின் வலி, 3BHK ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

அது வீடு இல்ல என்னோட மரியாதை.. மிடில் கிளாஸ் மனிதனின் வலி, 3BHK ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

3BHK Trailer: ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் நடிப்பில் 3BHK உருவாகி இருக்கிறது. ஜூலை 4ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. படத்தின் தலைப்பே கதை என்ன […]

3BHK Trailer: ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் நடிப்பில் 3BHK உருவாகி இருக்கிறது. ஜூலை 4ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.

படத்தின் தலைப்பே கதை என்ன என்பதை சொல்லிவிடுகிறது. ஒவ்வொரு நடுத்தர வர்க்க மனிதனுக்கும் சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவு.

ஆனால் அந்த கனவை நினைவாக்குவது அவ்வளவு சுலபம் கிடையாது. வாயைக் கட்டி வயிற்றை கட்டி காசு சேர்த்தோம் என்று சொல்வார்கள். அப்படித்தான் சிறுக சிறுக காசு சேர்த்து வீடு வாங்கும் மிடில் கிளாஸ் மக்கள் இருக்கின்றனர்.

அந்த மக்களின் வலியை பிரதிபலிக்கிறது இந்த ட்ரெய்லர். சரத்குமார் நடுத்தர வர்க்க குடும்ப தலைவனாக சொந்த வீடு கட்டுவதற்கு போராடுகிறார். அவருக்கு பக்கபலமாக தேவயானி இருக்கிறார்.

3BHK ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

கிட்டத்தட்ட சூர்யா வம்சம் படம் பார்த்தது போல் தான். ஆனால் அதில் ஒரே பாட்டில் ஓஹோன்னு வந்துடுவாங்க. இதில் அந்த இடத்தை அடைவதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பதை காட்டி இருக்கிறார்கள்.

அவர்களின் மகனாக சித்தார்த் அப்பாவின் பாரத்தை தாங்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய கேரக்டரும் எதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. சொந்த வீடு வாங்கணும்னு ஏன் இவ்வளவு ஆசை.

அது ஆசை இல்ல என்னோட மரியாதை என சரத்குமார் சொல்லும் வசனத்தில் தொடங்கி என்ன மாதிரி ஆயிடாத என சித்தார்த்தை பார்த்து சொல்வது வரை ரியாலிட்டியாக உள்ளது. இப்படியாக வெளிவந்துள்ள இந்த ட்ரெய்லர் தற்போது கவனம் பெற்று இருக்கிறது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.