வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சித்தாவால் சித்தார்த் பட்ட அவமானம்.. ரஜினி ஃபோன் போட்டு என்ன சொன்னார் தெரியுமா.?

Rajini Called Siddarth for Chithaa movie: பிரம்மாண்ட படங்கள் மற்றும் பெரிய நடிகர் படங்கள் வந்து ஆயிரம் கோடி வசூல் செய்தாலும் சத்தமே இல்லாமல் எப்பொழுதுமே ஒரு சின்ன படம் வெளிவந்து எளிதாக அனைவருக்கும் பிடித்த படமாக மாறி வசூலிலும் வெற்றி பெற்றுவிடும். அந்த வகையில் தற்போது சித்தார்த் நடித்த சித்தா படம் வெளியாகி அனைவரும் பேசும் விதத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த படம் பெரிதாக யாருக்கும் தெரியவில்லை சித்தார்த் நடித்திருந்ததால் மட்டுமே இந்த படத்தை பற்றி கொஞ்சம் வெளியே தெரிய வந்தது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக சித்தார்த் பல மாநிலங்களுக்கு தனியாகவே சென்று வந்தார். அப்படி இயல்பாக கர்நாடக மாநிலத்திற்கும் சென்று படத்தின் பிரமோஷனில் ஈடுபடும் பொழுது அங்குள்ள கன்னடர்களால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

Also Read : சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட ஜெயிலர் நரசிம்மா.. ரஜினி செய்யாததை செய்து காட்டிய சிவராஜ்

இதை அவர் எதிர்பார்க்கவில்லை மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே வந்து விட்டார். எதற்காக அங்குள்ள கன்னட பெரிய நடிகர்கள் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் இன்றுவரை தமிழ் சினிமா சார்பில் எந்த ஒரு நடிகரும், தயாரிப்பாளர் சங்கமும் எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதி காத்து வருவது அசிங்கமாக உள்ளது என சித்தார்த் கூறியுள்ளார்.

இந்த நிலையில் திடீரென ரஜினி இந்த படத்தை பற்றி கேள்விப்பட்டு சித்தார்த்திடம் திடீரென தொலைபேசியில் பேசியிருக்கிறார். அப்படி பேசிவிட்டு நான் படப்பிடிப்பில் இருக்கிறேன் முடித்துவிட்டு வந்தவுடன் உங்களுடன் சேர்ந்து இந்த படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன் என சித்தார்த்திற்க்கு ஆதரவு தெரிவித்து சந்தோஷப்படுத்தி இருக்கிறார்.

Also Read : சித்தார்த் பட வாய்ப்பு தந்தா படுக்கையை பகிர ரெடி.. உச்சகட்ட ஏக்கத்தில் பேசிய நடிகை

இதனால் சித்தார்த் தற்பொழுது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறார் படமும் அனைவரிடமும் கொஞ்சம், கொஞ்சமாக சேர்ந்து விட்டது இப்பொழுது ரஜினி கூறியதும். இன்னும் அதிக மக்களிடம் சென்று சேர்ந்து விடும் என்று நம்பிக்கை சித்தார்த்திற்கு வந்துள்ளது. இவ்ளோ பிரச்சனை நடந்து சோர்வாக இருந்த சித்தார்த்திற்கு ரஜினி கொடுத்த உத்வேகம் இன்னும் நிறைய சின்ன படங்களை தயாரித்து நடிக்கலாம் என்று எண்ணத்தை உருவாக்கியுள்ளது.

இது மாதிரி சின்ன படங்களை பெரிய நடிகர்களும் மற்ற பிரபலங்களும் மனதார பாராட்டி அதை பார்த்தால். கண்டிப்பாக அந்த படத்தின் இயக்குனர்களும், நடிகர்களும் பெரிய அளவில் முயற்சி செய்து அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். இதை ரஜினி புரிந்துகொண்டு தெளிவாக செய்துவிட்டார் மற்ற நடிகர்களும் இதை செய்ய வேண்டும் என சித்தார்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read : நார வாயால் சிக்கி சின்னா பின்னமான சித்தார்த்.. கடைசியில் கமல் காட்டிய கருணை

Trending News