சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மேடையில் அனிமல் கபூரை பொளந்து கட்டிய சித்தா.. என் படத்தைப் பார்க்க வெட்கம் கூச்சமா.!

Siddhartha scorned Animal movie on stage: சினிமாவில் வருடத்திற்கு பல படங்கள் ரிலீஸ் ஆனாலும் நம் மனதில் நிற்பது என்னவோ நம் உணர்ச்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உணர்வுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சில படங்கள் மட்டுமே!

அந்த வகையில் கடந்த ஆண்டு அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றதோடு வசூலிலும் தன்னிறைவை அடைந்தது.

சித்தார்த் எப்போதும் போல் காதல், ஆக்சன் என்று இல்லாமல் சமூக அவலங்களை அலசி ஒரு நடிகனாக தன்னுடைய பங்களிப்பால்  சித்தா  படத்திற்கு சிறப்பு செய்திருந்தார் என்றே சொல்லலாம்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தவறான வன்முறைகளை கையாளும் ஆண்ஆதிக்கத்திற்கு எதிரான கண்டனத்தை கடுமையாக பதிவு செய்திருந்தனர் சித்தா குழுவினர்.

சமீபத்தில் விருது வழங்கும் விழா மேடை ஒன்றில் சித்தா படத்தில் நடித்ததற்காக விருது வாங்கிய மகிழ்ச்சியில் இருந்த சித்தார்த், இப்படத்தைப் பற்றி ஆண் பெண் இருவர்களின் இரு வேறு புரிதல்களை சுட்டிக்காட்டி தரமான பதிலடி கொடுத்திருந்தார்.

அனிமல் படத்தை கிழித்து தொங்க விட்ட சித்தார்த்

இது பற்றி சித்தார்த் கூறும் போது என்கிட்டேயும் அருண்கிட்டயும் வந்து எந்த ஒரு பெண்மணியும் என்னால இந்த படத்தை பார்க்க முடியல! இந்த காட்சியை பார்க்கும் போது முகம் சுளிக்கிற மாதிரி இருக்குது.

கண்ண மூடிக்கிட்டு பார்த்தோம், அப்படின்னு என்று எந்தவித  கண்டனமோ விமர்சனமோ தெரிவிக்கவில்லை

ஆனால் ஆண்கள் வந்து என்னால இந்த படத்தை பார்க்க முடியவில்லை என்று சொல்லி இருக்காங்க! இந்த மாதிரி படங்கள் “நான் பார்க்க மாட்டேன்” என்று சொல்றான். 

அவன் மிருகம்னு டைட்டில் வைக்கிற படத்தை ரிலீஸ் பண்ணா போய் பார்க்கிறான், கொண்டாடுறான் ஆனா இது அவனுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்காம். என் படத்தைப் பார்க்க வெட்கம் கூச்சமா?

இதற்கு அர்த்தம்! படம் புடிக்கல என்பது இல்லை, படம் பார்பதற்கு குற்ற உணர்ச்சி! இது பரவாயில்லை போக போக சரியாயிடும். அப்படின்னு செருப்படி போன்ற பதிலை கூறி மனித மிருகத்தின் முகத்திரையை கிழித்திருந்தார் சித்தார்த்.

இதிலிருந்து  சித்தார்த் சொல்ல வருவது என்னவென்றால் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் திரைப்படத்தில் குழந்தைகளுடன் குடும்பமாக உட்கார்ந்து பார்க்க முடியாமலும், முகம் சுளிக்க வைப்பதும் ஆன நிறைய தவறான மற்றும் வன்முறை நிறைந்த காட்சிகள் அமைந்திருந்தது.  

இதை சுட்டிக்காட்டி தன்னுடைய “சித்தா” படத்துடன் ஒப்பிட்டு  சமூகத்தில் தவறான கண்ணோட்டத்துடன் இருக்கும்  ஆண்களை குறிப்பிட்டு சாட்டையடி கொடுத்திருந்தார் சித்தார்த்.

சித்தார்த்தின் இந்த ஆக்ரோஷமான பேச்சுக்கு அவரது ரசிகர்களும் பெண்களும்  பலத்த கரகோசத்துடன் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதற்கு வலைதளத்திலும் அவரது ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ் களை அள்ளிவிட்டு வருகின்றனர்.

Trending News