TVK Vijay: தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அதை முன்னிட்டு இன்று மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் விழா நடைபெறுகிறது.
அதில் கட்சியினர் தொண்டர்கள் ரசிகர்கள் உட்பட அனைவரும் பங்கேற்றுள்ளனர். தற்போது அந்த விழா ஆரம்பித்துள்ள நிலையில் விஜய் GetOut என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.
மத்திய மாநில ஆளும் கட்சிகளுக்கு எதிராக இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி பெண்களின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் அவலங்களை கண்டும் காணாத அரசு.
விமர்சனத்தை எதிர்கொள்ளாமல் மக்களின் குரல்களை ஒடுக்கும் அரசியல் கோழைத்தனம். ஓட்டுக்காக சமூக சீர்கேடுகளை எதிர்க்க பயப்படுதல்.
திறனற்ற ஆட்சி நிர்வாகம், வன்முறைகளை ஊக்குவித்தல், இயற்கைவள சுரண்டல், மும்மொழி கொள்கை போன்றவைகளுக்காக தான் இந்த கெட் அவுட்.
அதற்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் விஜய் தன்னுடைய முதல் கையெழுத்தை போட்டு தொடங்கி வைத்தார். அப்போது புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுன், பிரசாந்த் கிஷோர் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து இந்த ஹாஷ் டேக் டிரெண்டிங்கில் இருக்கிறது. அது மட்டும் இன்றி ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனமும் தற்போது இதன் மீது திரும்பி இருக்கிறது.