வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கடத்தல் வழக்கில் சிக்கிய சில்க் ஸ்மிதா.. பின்னணியில் இருந்த பிரபல இசையமைப்பாளர்?

Silk Smitha: ஒரு கவர்ச்சி நடிகை காலம் சென்ற பின்பும் ரசிகர்களால் கொண்டாடப்படுவது சாத்தியமா என்று கேட்டால் அது சில்க்கிற்கு மட்டுமே சாத்தியம். என்னதான் கவர்ச்சிக்காக படங்களில் அவரை நடிக்க வைத்தாலும், யாருக்கும் பயந்து, கைகட்டி வாய்ப்பு கேட்டது கிடையாது. மேலும் தனக்கு எதிராக நடந்த சில விஷயங்களை தைரியமாக மீடியாவில் பேசி இருக்கிறார்.

சில்க் ஸ்மிதா பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்று அவரிடம் நேர்காணல் நடத்தியது. எப்போதுமே இது போன்ற பேட்டிகளில் அவர் ரொம்பவும் தைரியமாக மனதில் பட்டதை பேசி விடுவார். அந்த பேட்டியில் சில்க் கடத்தல் வழக்கு ஒன்றில் சிக்கியதை பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் தமிழ் சினிமாவையே உலுக்கி விட்டது.

சில்க், அவர் கடத்தல் வழக்கில் விசாரிக்கப்பட்ட கதையின் பின்னணியை விவரித்து இருக்கிறார். மெல்லிசை மன்னர் என தமிழ் சினிமா ரசிகர்களால் போற்றப்படும் எம் எஸ் விஸ்வநாதன் ஒரு முறை சிங்கப்பூரில் இசை கச்சேரி ஒன்றை நடத்தி இருக்கிறார். அதற்கு சில்க் வந்தே தீர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். வருவதற்கு சம்மதித்த சில்க் அப்போதே நான் மேடையில் எந்த காரணத்தை கொண்டும் நடனம் ஆட மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:கும்பிடு போடாதது ஒரு குத்தமா?. சூட்டிங் ஸ்பாட்டில் விசித்ராவை கதறவிட்ட காமெடியன்

ஷூட்டிங்கில் தைரியமாக ஆடும் அவருக்கு மேடையில் ஆடுவதற்கு கூச்சமாக இருக்குமாம். அதனால் தான் நிறைய நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதில்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கு சம்மதித்த எம் எஸ் வி இசை கச்சேரிக்கான பிளானையும் போட்டு இருக்கிறார். சென்னையில் இருந்து கிளம்பும்போது சில்க்ஸ்மிதா எம் எஸ் வி குடும்பத்துடன் தான் சென்று இருக்கிறார்.

நிற்கதியாக நின்ற சில்க் ஸ்மிதா

இசை கச்சேரியில் சில்க் மேடை ஏறியதும் நமஸ்காரம் மட்டும் சொல்லிவிட்டு கீழே இறங்கி விட்டாராம். ஆனால் அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அவரேரை ஆட சொல்லி கூச்சலிட்டு இருக்கிறார்கள். சில்க்ஸ்மிதா காவலர்கள் உதவியோடு அவருடைய ரூமுக்கு சென்று விட்டாராம். அவர் பின்னாடியே வந்த எம்எஸ்வி ரசிகர்கள் நீ ஆடவில்லை என்றால் விட மாட்டார்கள் நீ வந்து ஆடி விடு என்று சொல்லி இருக்கிறார்.

சில்க் ஸ்மிதா முடியவே முடியாது என்று மறுத்து விட்டாராம். மறுநாள் காலையில் எம் எஸ் வி குடும்பத்தினர் அவரிடம் சொல்லாமல் இந்தியா கிளம்பி விட்டார்களாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் உதவியோடு இந்தியா திரும்பி இருக்கிறார் சில்க். அவரை இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாட்டாளர்களுக்கு சிறிய தொகையையும் கொடுத்திருக்கிறார். ஒரு வழியாக சென்னை ஏர்போர்ட் வந்திருக்கிறார் சில்க்.

சென்னை ஏர்போர்ட்டில் காவலர்கள் அவரை நிறுத்தி அவர் கொண்டு வந்திருந்த பைகளை சோதிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நான்கு சிபிஐ ஆபீசர்கள் சில்க்கின் உடமைகளை சோதித்து பார்த்துவிட்டு, எதுவும் இல்லை என்று சொல்லி மன்னிப்பு கேட்டு விட்டு சென்று விட்டார்களாம். சில்க் ஏதோ ஒரு விலைமதிக்கத்தக்க பொருளை கடத்தி வருவதாக தங்களுக்கு போன் வந்ததாக சொல்லி இருக்கிறார்கள். அதன் பின்னர் அந்த கேஸ் என்ன ஆனது என்று தனக்கு தெரியாது என சில்க் அந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

Also Read:படுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோவின் தந்தை.. பிக் பாஸில் மறைத்த சீக்ரெட், பெயரோடு போட்டுடைத்த விசித்ராவின் தோழி

Trending News