வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நான் தான் அடுத்த சில்க் என அலட்டிக் கொண்ட 6 நடிகைகள்.. வேஸ்ட் பீஸ் என தூக்கி எறிந்த தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் காந்த பார்வையாலும், கவர்ச்சியாலும் ஆண்களை மட்டுமல்லாமல் பெண்களையும் ரசிக்க வைத்தவர் சில்க்ஸ்மிதா. வண்டி சக்கரம் என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்பு பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அவர் இறந்து 25 வருடங்களுக்கு மேல் ஆகியும் ரசிகர்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் சில்க் மாதிரி ஆக வேண்டும் என எண்ணி சில நடிகைகள் சினிமாவிற்கு வந்த வேகத்திலேயே காணாமல் போயுள்ளனர்.

டிஸ்கோ சாந்தி: தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடம் மற்றும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுபவர் நடிகை டிஸ்கோ சாந்தி. இவருடைய கவர்ச்சி நடனம் இடம்பெற்ற பல படங்கள் வந்துள்ளது. ஆனால் சில்க் நடித்த காலகட்டத்திலேயே இவரும் நடிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் டிஸ்கோ சாந்தியை கவர்ச்சியில் ஓரம் கட்டிவிட்டார் சில்க்.

புவனேஸ்வரி: தமிழ் சினிமாவில் 90களில் பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் நடிகை புவனேஸ்வரி. இவர் பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார். இவர் பத்து வருடங்களுக்கு முன்பு விபச்சார வழக்கில் சிக்கினார். ஆனால் தற்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மும்தாஜ்: மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். அதன்பிறகு பட்ஜெட் பத்மநாதன், குஷி, வீராச்சாமி போன்ற பல படங்களில் கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் மும்தாஜ் நடித்து வந்தார். ஆனால் படங்களில் கவர்ச்சி காட்டியும் சரியான படவாய்ப்புகள் மும்தாஜுக்கு கிடைக்கவில்லை.

கிரண்: விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கிரண். அதன் பிறகு வில்லன், அன்பே சிவம், வின்னர் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் தற்போது கிரண் அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது 40 வயதை கடந்தும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் கிரண்.

நமிதா: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்தவர் நடிகை நமீதா. விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின்பு கவர்ச்சி காட்ட தொடங்கிய நமிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். ஆனால் சில வருடங்களிலேயே உடல் எடை கூடியதால் பட வாய்ப்பு இல்லாமல் போனது.

ராய் லட்சுமி: ராய் லட்சுமியின் மாடல் துறையில் இருந்து சினிமாவிற்கு நுழைந்தவர். இவர் தமிழ், மலையாள, ஹிந்தி மொழி படங்களில் நடித்தார். ராய் லட்சுமி விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பிறகு கவர்ச்சியை கையில் எடுத்து பல படங்கள் நடித்தார். ஆனால் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்.

Trending News