செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஷகிலாவிற்கு கன்னத்தில் பளார் என விட்ட சில்க் ஸ்மிதா.. பலநாள் கோபத்தை பழி தீர்த்த சம்பவம்

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு இன்றளவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சில்க் ஸ்மிதாவின் நடித்த அனைத்து படங்களில் இடம் பெற்ற பாடல்களில் ஆடிய அனைத்தும் ஹிட்டான பாடல்கள். தன் கவர்ச்சியான கண்கள், மினுமினுப்பான மேனியை கொண்ட சில்க் ஸ்மிதாவிற்கு படத்தின் கதாநாயகிகளை விட அதிக சம்பளம் பெற்றார் என்பதே உண்மை. ஐட்டம் டான்ஸர் என்ற பெயரை தாண்டி கனவுக்கன்னி சில்க்ஸ்மிதா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

சில்க் ஸ்மிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஐட்டம் டான்ஸர்-களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் சில்க் ஸ்மிதா அளவிற்கு இன்றளவும் எந்த ஐட்டம் டான்சர்களும் தமிழ் சினிமாவில் இடம் பெறவில்லை என்பதே உண்மை. இந்நிலையில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பாலிவுட்டில் டர்ட்டி பிக்சர்ஸ் எனும் திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன், சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சில காட்சிகளில் மாற்றங்கள் செய்தன.

அதிலும் முக்கியமாக, கவர்ச்சி நடிகை ஷகிலாவின் கதாபாத்திரத்திலும் ஒரு நடிகை நடித்து இருப்பார். அந்தக் காட்சியில் ஷகிலா ஒருவருடன் படுக்கை அறையை பகிர்ந்து கொண்டு வெளியே வருவார் ஒரு அக்காவாக நடித்த சில்க் ஸ்மிதா இப்படியெல்லாம் பண்ணுவியா? என்று கண்டிக்கும் விதமாக ஷகிலாவின் கன்னத்தில் அறையும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

இது குறித்து தற்போது ஒரு பேட்டியில் பேசிய ஷகிலா, சில்க் ஸ்மிதா இருந்த காலகட்டத்தில் தன்னுடைய ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கை தோன்றியது. அப்போது நானும் சில்க் ஸ்மிதாவும் ஒரு படத்தில் நடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அந்தத் திரைப்படத்தில் என்னை சில்க் ஸ்மிதா கன்னத்தில் அறையும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த காட்சியை எடுப்பதற்கு முன்னாள் சில்க் இடம் நீங்கள் பலமாக அறைவீர்களா? இல்லை லேசாக அறைப்பீர்களா? என்று ஷகிலா கேட்டார்.

அதற்கு சில்க் ஸ்மிதா நான் லேசாக தான் அறைவேன் என்று சொன்னார். பிறகு படப்பிடிப்பின்போது சில்க் ஸ்மிதா என்னை பலமாக அறைந்தார். இதனால் டைரக்டர் கட் சொன்னவுடன் நான் இந்த திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றதாக ஷகிலா தெரிவித்தார்.

ஆனால் அந்த படத்தில் காண்பித்தது போல சில்க் ஸ்மிதா என்னிடம் எதுவும் கூறவில்லை. அதாவது ஷகிலாவை பார்த்து சில்க் ஸ்மிதா என் அளவுக்கு நீ வளர்ந்து வருவியா என்று சில்க் ஸ்மிதா கேட்கும் வார்த்தைகளும் டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். அந்த படத்திற்காக டைரக்டர் அப்படி வசனத்தை எழுதி உள்ளார்.

ஆனால் அது உண்மை இல்லை என தெரிவித்தார் ஷகிலா. தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவிற்கு அடுத்தபடியாக கவர்ச்சி நடிகைகளாக ஷகிலா அனுராதா உள்ளிட்டோர் வலம் வந்தனர். முக்கியமாகச் ஷகிலாவிற்கு கேரளாவிலும் தமிழகத்திலும் பல ரசிகர்களை பெற்றார். இவருடைய திரைப்படத்திற்கு ஹவுஸ்ஃபுல் ஆகும் அளவிற்கு பல திரைப்படங்கள் இவரது கவர்ச்சியான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ஷகிலா அம்மாவாக பிரபலமானார். தற்போது யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் சர்ச்சையான பேட்டிகளையும் கொடுத்துக் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News