செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பிரபல இயக்குனரை உருக உருக காதலித்த சில்க் ஸ்மிதா.. பல வருடம் வெளிவராத காதல் ரகசியம்

தமிழ் சினிமாவில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் இன்று வரை அனைவரின் மனதில் தோன்றும் ஒரே நடிகை சில்க் ஸ்மிதா. தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி புயல் என்று அழைக்கப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர். வசீகரமான கண்களும், கொஞ்சும் குரலாலும், கவர்ச்சியான உடலாலும், ஆண்களை கட்டி இழுக்கும் முகபாவனை என பார்க்கும் அனைவரையும் கவரும் வகையில் சிலுக்கு ஸ்மிதா தனது நடிப்பையும், நடனத்தையும் வெளிப்படுத்துவார்.

கவர்ச்சி நாயகி சிலுக்கு ஸ்மிதாவை கண்டு 80 காலக்கட்டங்களில் மயங்காதவர்களே கிடையாது. திரைப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை சிலுக்கு ஸ்மிதா திரையில் தோன்றினால் போதும் விசில் சத்தமும், ஆர்பரிப்பும் அதிகம். இதன் காரணமாக பிரபல இயக்குனர்கள் கட்டாயம் தங்களது படங்களில் சில்க் ஸ்மிதாவின் முகத்தை காண்பித்து வசூலை அள்ளுவர்.

Also Read : தமிழ் சினிமாவில் ‘A’ படங்களை அறிமுகப்படுத்திய இயக்குனர்.. சில்க் ஸ்மிதாவின் முன்னாள் காதலர்

அப்படிப்பட்ட சிலுக்கு ஸ்மிதாவிற்கு பல காதல் கடிதங்களும், தங்கம், வைரம் என பரிசு பொருட்களும் வந்ததுண்டு. ஆனால் சில்க் ஸ்மிதா அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவே மாட்டார். சினிமாவிற்காகவே தனது வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்த சிலுக்கு ஸ்மிதா பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்தார் என்பதுதான் அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.

பல முன்னனி இயக்குனர்களுடன் 80 காலகட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் இயக்குனர் வேலு பிரபாகரன். இவர் சில்க் ஸ்மிதா நடிப்பில் வெளியான பிக்பாக்கெட் திரைப்படத்தில் கேமரா மேனாக பணியாற்றினார். அப்போது சில்க் ஸ்மிதா வேலு பிரபாகரனை கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளாராம்.

Also Read : சில்க் ஸ்மிதாவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியது யார் தெரியுமா.? அஞ்சாநெஞ்சன் பயில்வான் பேட்டி!

காரணம் அவரின் அழகு மற்றும் அவர் அணியும் உடைகள் தனித்துவமாக இருக்கும். பல ஹீரோக்கள் கூட அவரிடம் உடை எப்படி அணிவது என்று யோசனை கேட்பார்களாம். மற்ற இயக்குனர்களை போல் வேலு பிரபாகரன் இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பாராம். அதிகமாக யாரிடமும் பேசாமல், தனது திறமையால் பல பாராட்டுகளையும் பெற்றவர். இதையெல்லாம் பார்த்து வந்த சில்க் ஸ்மிதா வேலு பிரபாகரனை காதலித்து வந்துள்ளார்.

இயக்குனர் வேலு பிரபாகரனும் கவர்ச்சி திரைப்படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர். 2017 ஆம் ஆண்டில் தனது 60 வயதிலும் 30 வயது நடிகையை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருபவர். ஆனால் சில்க் ஸ்மிதா தன் மீது வைத்த காதலை தன்னால் மறைக்க முடியாது. பின்னர் நானும்  காதலித்தேன் என வேலு பிரபாகரன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also Read : பல தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சில்க் ஸ்மிதா.. அதுக்கும் ஒரு மனசு வேணும் சார்

Trending News