வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சிம்பு காரால் ஏற்பட்ட கோர விபத்து.. வெளிவந்த சிசிடிவி வீடியோ, பலியான உயிர்

டி ராஜேந்தர் லட்சிய திமுக கட்சியின் நிறுவனர். இப்பொழுது அந்த கட்சி இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. இந்நிலையில் டி ராஜேந்தரின் சென்ற சிம்புவின் கார் விபத்துக்குள்ளாகி ஒருவர் படு காயமடைந்ததாக ஒரு வீடியோ உலா வந்து கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று டி ராஜேந்தர், தனது குடும்பத்துடன் வெளியே செல்வதற்காக சிம்பு காரில் சென்றுள்ளார். தேனாம்பேட்டை அருகே இளங்கோ சாலையில் கார் வந்து கொண்டிருக்கும்போது ஒரு முதியவர் மீது கார் மோதி உள்ளது. முனுசாமி என்ற அந்த முதியவர் ஊனமுற்றவர். மேலும் அவர் சாலையைக் கடக்க ஊர்ந்து செல்கிறார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாய் டி ராஜேந்தரின் கார் அவர் மீது ஏறி இறங்கியது.

காரில் இருந்த டி ராஜேந்தர் ஆம்புலன்ஸுக்கு போன் செய்து, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முனுசாமியை சேர்த்துள்ளார். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் டி ராஜேந்தரின் கார் ஓட்டுனர், இதற்கு முழு பொறுப்பு ஏற்று சரண்டர் ஆகியுள்ளார். மேலும் அவர் டி ராஜேந்திரன் அவர்களுக்கும், இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்.

காரை ஓட்டி வந்த டி ராஜேந்தரின் ஓட்டுனரை காவல் துறையினர் கைது செய்து வழக்கு பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முதியவர் முனுசாமி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நடந்து கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஆகியுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட முனுசாமி, இன்று இறந்ததை ஒட்டி தான் இந்த செய்தி காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

Trending News