இரண்டு வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த சிம்பு, ஐசரி கணேஷ் பஞ்சாயத்து பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது. 2022 இல் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்தவர் ஐசரி கணேஷ். அந்த படத்திற்கு பின் சிம்பு இந்த நிறுவனத்துக்கு இரண்டு படங்கள் பண்ணித் தருவதாக ஒப்பந்தம்.
ஆனால் தொடர்ந்து சிம்பு கால் சீட் கொடுக்க மறுக்கவே இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அதன் பின் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு இப்பொழுது சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. பத்து தலை படத்துக்கு பிறகு ஒரு வருடமாக சிம்புக்கு படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.
STR48 படம் கமல் தயாரித்து தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்தது. இந்த படத்திற்காக சிம்பு ஒரு வருடமாக நீண்ட தலைமுடி வளர்த்து காணப்பட்டார் ஆனால் அந்த படம் பட்ஜெட் அதிகமான காரணத்தால் கமல் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் இந்த படம் டிராப்பானது.
முருங்கை மரத்திலிருந்து இறங்க மறுக்கும் வேதாளம்
இப்பொழுது சிம்பு கைவசம் தக்லைப் படம் மட்டுமே இருக்கிறது. அந்த படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மலையாளத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் 2018. அதன் இயக்குனர் ஆண்டனி ஜோசப்.
இப்பொழுது அந்த இயக்குனர் சிம்புக்காக ஒரு கதை எழுதியிருக்கிறார். அதை சிம்புவிடம் சொல்லி அவருக்கும் கதை பிடித்து போனதால், படம் டேக் ஆப் நிலையில் இருந்தது. இதை ஐசரி கணேசின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இருந்தது.ஆனால் சிம்பு போட்ட குண்டால் மொத்தமும் வீணா போனது. 50 கோடிகள் வரை சம்பளம் கேட்கிறார். இப்படி வந்த படத்தை எல்லாம் அதிகம் சம்பளம் கேட்டு வீணடிக்கிறார். பழைய வேதாளமாக மாறி வருகிறார்.