செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கேப்டனுக்கும், நவரச நாயகனுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா.? ரகசியத்தை போட்டுடைத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள்

சினிமாவில் பல துறைகள் இருந்தாலும் பல ஆபத்துகளை சந்தித்து, படத்தில் நடிக்கும் பிரபலங்களுக்கு சண்டை காட்சிகளை பயிற்றுவிப்பவர்கள்தான் ஸ்டன்ட் மாஸ்டர்கள். இவர்கள் பல ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளை நடிகர்களுக்கு நடித்து காட்டி வருவார்கள்.

இப்படிப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு சண்டை காட்சியின் போது , மண்டை,கை,கால்கள் உடைவது உள்ளிட்ட பல விபத்துகள் அடிக்கடி நடைபெறும். இந்நிலையில் இவர்களது உடலை கட்டுமஸ்தாகவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இவர்களுக்கு உள்ளது.

Also Read : கேப்டனுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்த நடிகை.. மொத்த சொத்தும் பறிபோன சோகம்

இந்த நிலையில் இவர்களின் ஆரோக்கியத்தை கவனிக்கும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் தனி யூனியனே உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் பிரபல நடிகர்கள் இருவர் ஸ்டண்ட் மாஸ்டர்களின் நலனில் அதிக அக்கறை காட்டும் விதமாக செயல்படுவார்களாம்.

அப்படி , ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்களுக்கு அதிக வேலை உள்ள நடிகரின் திரைப்படம் என்றால்,அது கேப்டன் விஜயகாந்தின் திரைப்படங்கள் தான். இவரது திரைப்படத்தில் 10 நிமிடத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஆக்ஷன் காட்சிகள் அமைந்திருக்கும்.இவருக்காக பல ஸ்டண்ட் கலைஞர்கள் டூப்பு போட்டு ரிஸ்க்கெடுத்து நடிப்பர்.

Also Read : ஆணவத்தால் அழிந்த விஜயகாந்த்.. இப்ப இருக்கிற நிலைமைக்கு அவர்தான் காரணம்

இந்தநிலையில் நடிகர் விஜயகாந்த் ஷூட்டிங் முடிந்தவுடன் ஸ்டண்ட் மாஸ்டர்களை அழைத்து உணவு சமைத்து விருந்து பரிமாறி சில உதவிகளையும் செய்வாராம். இதுமட்டுமில்லாமல் விஜயகாந்தே உணவை தன கையால் எடுத்து ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்களுக்கு ஊட்டிவிட்டு செல்வாராம்.

இவரை போலவே நவரச நாயகன் கார்த்திக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்களிடம் அன்பாக நடந்து கொள்வாராம்.படப்பிடிப்பின்போது சாப்பாடு நேரம் வந்துவிட்டால் ஸ்டண்ட் மஸ்டர்ஸ்களுடன் ஒன்றாக அமர்ந்து கார்த்திக் சாப்பிடுவாராம்.இப்படி தங்களுக்கு சண்டை பயிற்சி அளிக்கும் ஸ்டாண்ட் மாஸ்டர்களை இவர்கள் அளவிற்கு யாராலும் கவுரவிக்க முடியாது.

Also Read : லெட்டர் எழுதிய விஜய்.. அண்ணனை இன்றுவரை விட்டுக்கொடுக்காத இளையதளபதி

Trending News