சிம்ரன், ஜோதிகா ரெண்டு குதிரைகளையும் ஒரே சமயத்தில் ஓட்டுற போல.. விஜய் சொன்னதாக சர்ச்சையை கிளப்பும் வாரிசு நடிகர்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வாரிசு படத்தில் நடித்திருக்கும் நடிகர் ஒருவர் நடிகை சிம்ரன் மற்றும் ஜோதிகா இருவரையும் விஜய், ‘குதிரைனு’ சொன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இதை இப்போது அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து விளாசி வருகின்றனர். விஜயின் நடிப்பில் 2000-ல் வெளியான குஷி படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்திருந்த நடிகர் ஷாம், அதன் பிறகு கதாநாயகனாக 12B படத்தில் அறிமுகமானார்.

Also Read: ஆர்வக்கோளாறில் தேவையில்லாத வேலையை பார்க்கும் கூட்டம்.. விஜய் அஜித் பெயரை கெடுக்கிறாங்க

இந்த படத்தில் ஷாம்-க்கு ஜோடியாக சிம்ரன், ஜோதிகா இரண்டு கதாநாயகிகள் இருப்பார்கள். முதலில் சினிமாவில் சைடு கேரக்டரில் வந்த ஷாம், அதன் பிறகு கதாநாயகனாக அறிமுகமானபோது, ‘ யாருடா நீ ஒரே சமயத்தில் சிம்ரன், ஜோதிகா ரெண்டு குதிரைகளையும் ஓட்டிகிட்டு வர்ற!’ என்று விஜய் கேட்டதாகவும் அதற்கு ஷாம், ‘எல்லாம் கடவுள் சித்தம்’ என்றும் பதில் அளித்தாராம்.

ஏற்கனவே ஷாம் உடைய சினிமா கேரியர் படுத்திருக்கும் இந்த சூழலில் இவருடைய இந்த சர்ச்சைக்குரிய பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் வாரிசு படத்தில் விஜயின் சகோதரராக ஷாம் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 2022 ஆம் ஆண்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த 5 நடிகைகள்.. கனவுக்கன்னி ஆன தளபதியின் கதாநாயகி

இந்த நிலையில் ஷாம், ‘சிம்ரன் ஜோதிகாவை குதிரை என விஜய் சொன்னதாக சொல்லி’ சோசியல் மீடியாவில் விஜய், அஜித் ரசிகர்களை சண்டை போட வைத்திருக்கிறார். இதனால் கோபப்பட்டு வார்த்தைகளை விடும் விஜய் ரசிகர்களுக்கு அஜித் ரசிகர்கள் பதிலடியாக மங்காத்தா படத்தில் அஜித் கெட்ட வார்த்தை பேசும் வசனத்தை ஷேர் செய்து விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கின்றனர்.

இப்படி வாரிசு பட ப்ரொமோஷனுக்காக ஷாம் ஓப்பன் ஆக பேசி உளறி கொட்டியது தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறிவிட்டது. அத்துடன் 8 வருடங்களுக்குப் பிறகு வாரிசு, துணிவு படத்தின் மூலம் திரையில் மோதிக் கொள்ளும் தல, தளபதி ரசிகர்கள் இப்போது இருந்தே சம்பவம் செய்ய துவங்கி விட்டனர்.

Also Read: IMDB இந்தியளவில் பாப்புலரான 6 பிரபலங்கள்.. அஜித், விஜய்யை காணாமல் ஆக்கிய நடிகர்