சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வாய்ப்பு இறங்கும்போது கிளாமரை காட்டி ஜெயித்த சிம்ரன்.. இடை அழகில் மிரட்டி பேயாட்டம் போட்ட 5 படங்கள்

ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சிம்ரன். ஒரு காலகட்டத்தில் கனவு கன்னியாய் வலம் வந்த இவர் தன் ஆரம்ப காலத்தில் வாய்ப்புக்காக செய்த வேலை பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

பல முக்கிய பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்த இவர் முன்னணி கதாநாயகியாக இடம் பெற்ற படங்கள் பல ஹிட் கொடுத்திருக்கிறது. மேலும் தன் அசத்தலான நடனத்தால் பெரிதும் பேசப்பட்ட இவர் நடித்த 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: வெயில் கொடுமைக்கு உள்ள போனா ஆர்யாவின் அலப்பறை தாங்கல.. 20% வசூலை கூட தோட முடியாமல் கதறவிட்ட காதர் பாட்ஷா

எதிரும் புதிரும்: 1999ல் தரணி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் மம்முட்டி, சங்கீதா, நெப்போலியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்று இருப்பார்கள். இப்படத்திற்கு கூடுதல் சிறப்பாக சிம்ரன் சுல்தானே என்னும் பாட்டில் ஆடிய ஐட்டம் டான்ஸ் மக்களிடம் பெரிதும் பேசப்பட்டது. இதற்குப் பின்பு தான் பல பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது என்றே கூறலாம்.

வாலி: 1999 எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வாலி. இப்படத்தில் அஜித், ஜோதிகா, சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்று இருப்பார்கள். இப்படத்தில் சிம்ரனின் எளிமையான கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் இவர் இடம் பெற்ற பாடல் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து ஒன்றாகும்.

Also Read: மட்டமான கதையை வைத்து உருட்டும் பாக்கியலட்சுமி.. பார்க்கவே கன்றாவியா இருக்கும் ராதிகாவின் செயல்

ஜோடி: 1999ல் பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஜோடி. இப்படத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். இப்படத்தில் இவர் இடம் பெற்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இவரின் நடனமும் கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

பஞ்சதந்திரம்: 2002ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பஞ்சதந்திரம். இப்படத்தில் கமல், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் சிம்ரனின் எதார்த்தமான நடிப்பும், ரம்யா கிருஷ்ணனுக்கு போட்டியாக இடம் பெறும் நடனமும் நல்ல வரவேற்பு தந்தது.

Also Read: அத்தைக்கு லிப் லாக் கொடுத்து வாந்தி வர வைத்த விக்ரம்.. இது என்னடா மோசமான உருட்டா இருக்கே!

உன்னைக் கொடு என்னை தருவேன்: 2000ல் வெளிவந்த இப்படத்தில் அஜித், சிம்ரன், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் மூலம் தான் சிம்ரன் பெரிதளவு பட வாய்ப்புகளை பெற்றார் என்றே கூறலாம். இப்படத்தில் கவர்ச்சியான நடனத்தால் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்தார் சிம்ரன்.

Trending News