புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இளசுகளை ஜொள்ளு விட வைத்த சிம்ரனின் பேயாட்டம்.. அல்வா இடுப்பில் கிறங்கிய அஜித்

என்னதான் நடிகைகள் அழகாக இருந்தாலும் நடிப்பு, நடனம் எல்லாம் யாரோ ஒரு சிலருக்கு தான் ரசிக்கும்படி அமையும். அப்படி ஹீரோயினாக இருக்க அனைத்து தகுதிகளையும் கொண்டவர் தான் நடிகை சிம்ரன். இவரது இடுப்பு அசைவை பார்க்கவே திரையரங்கில் இளசுகள் கூட்டம் அலைமோதியது எனலாம். அப்படி சிம்ரன் ஆடிய 5 சூப்பர்ஹிட் பாடல்களை தற்போது பார்க்கலாம்.

சுல்தானே: இயக்குனர் தரணி இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான எதிரும் புதிரும் திரைப்படத்தில் இடம்பெற்ற தொட்டு தொட்டு பேசும் சுல்தானே பாடலில் சிம்ரன் ஐட்டம் டான்ஸ் ஆடியிருப்பார். பிரபுதேவாவின் அண்ணனும், நடன இயக்குனருமான ராஜு சுந்தரத்துடன் இவர் ஆடிய இந்த பாடல் பட்டித் தொட்டியெங்கும் வைரலானது.

Also Read: சிம்ரன் உடன் 22 வருடங்களுக்குப் பிறகு இணையும் நடிகை.. மல்டி ஸ்டார்களுக்கு போட்டியாக வரும் மல்டி ஆக்ட்ரஸ் மூவி

சேலையிலே வீடு காட்டவா: இயக்குனர் ராஜ் கபூர் இயக்கத்தில் சிம்ரன், அஜித் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான அவள் வருவாளா படம் திரில்லர் கலந்த காதல் திரைப்படமாக உருவானது. இப்படத்தில் அஜித்துடன் சிம்ரன் ஆடிய சேலையிலே வீடு காட்டவா சேர்ந்து வசிக்க பாடலை இன்று வரை ரசிக்கத்தவரே கிடையாது. சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை என பல நிறங்களில் சிம்ரன் சேலை கட்டி ஆடிய இந்த பாடல் சிம்ரனின் மார்க்கெட்டையே உயர்த்தியது எனலாம்.

நிலவை கொண்டு வா: இயக்குனர் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் உருவான வாலி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். முதலிரவுக்காக காத்திருக்கும் இளசுகளின் மனதை அதகளப்படுத்திய பாடல் எனலாம். வைரமுத்து வரிகளில் உருவான நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை பாடல் அனுராதா ஸ்ரீராம், உன்னிக்கிருஷ்ணன் குரலில் வெளியாகி ஹிட்டானது. ஆனால் சிம்ரன் இப்பாடலில் காட்டிய கவர்ச்சியும், முகப்பவனையும் வேறு எந்த நடிகையாளும் இப்படி நடிக்க முடியாது என்பதை நிரூபித்தவர்.

Also Read:  என்ன இது சிம்ரன்? வயசானாலும் உன்னோட அழகும் ஸ்டைலும் குறையவே இல்ல

மனம் விரும்புதே: இயக்குனர் வசந்த் இயக்கத்தில் விஜய், சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நேருக்கு நேர் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருப்பார். மனம் விரும்புதே உன்னை என்ற பாடலுக்கு சிம்ரன் ஆடிய சோலோ நடனம் இளசுகளின் வாயை பிளக்க வைத்தது எனலாம். இந்த பாடலில் தான் சிம்ரனின் தனித்துவமான இடுப்பழகு பிரபலமானது.

அஞ்சாதே ஜீவா: பிரஷாந்த், சிம்ரன் இணைந்து நடித்த ஜோடி படத்தை இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ஒவ்வொரு பாடலும் மெகா ஹிட்டான நிலையில், அஞ்சாதே ஜீவா பாடலில் சிம்ரன் ஆடிய நடனம் பார்க்க கிளாசிக்காக இருக்கும். தலையில் கொண்டை, இரண்டு மூக்குத்தி, நெற்றியில் பெரிய பொட்டு, ஜாக்கெட், பாவாடை என சிம்ரன் இப்பாடலில் அணிந்து வரும் ஒவ்வொரு ஆடையிலும் கவர்ச்சியில் மின்னியிருப்பார்.

Also Read: விஜய்க்கு கனகச்சிதமாக பொருந்திய 5 நடிகைகள்.. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இடுப்பழகி சிம்ரன்

Trending News