ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

டிஆர்பி ரேட்டிங்கில் விட்ட இடத்தை பிடித்த சிங்க பெண்ணே சீரியல்.. முதல் 5 இடத்தில் ஜொலிக்கும் சன் டிவி சீரியல்கள்

Sun Tv Serial TRP Rating: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எது மக்கள் மனதை அதிகமாக கொள்ளையடித்து இருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங் இன் படி கணித்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரத்தில் முதல் ஐந்து இடத்தைப் பிடித்த சன் டிவி சீரியல்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

சுந்தரி சீரியல் 8.81 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த வாரம் தான் சுந்தரி சீரியலுக்கு இறுதி அத்தியாயம் என்று சொல்வதற்கு ஏற்ப கிளைமாக்ஸ் கிட்ட நெருங்கி விட்டது. இதில் பலரும் எதிர்பார்த்தபடி சுந்தரி வெற்றி திருமணம் நடக்கப்போகிறது. இதற்கு கார்த்திக்குடன் சேர்ந்து அனுவும் ஜோடி சேர்ந்து வரப்போகிறார்.

அடுத்ததாக ராமாயணம் மற்றும் மருமகள் இந்த இரண்டு சீரியல்கள் இந்த வாரத்தில் 8.89 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. குடும்ப சீரியலுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ, அதேபோல இதிகாச புராணத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக ராமாயணம் சீரியல் தொடர்ந்து மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.

அதே போல பிரபு மற்றும் ஆதரிக்கும் கல்யாணம் ஆகியிருந்தாலும் இருவரும் சந்தோஷமாக வாழ முடியாத அளவிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இதனால் பிரபுவை விட்டு தனியா போகலாம் என்று முடிவு எடுக்கும் ஆதிரை பிரபுவின் சித்தி தடுத்து அந்த குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து பிரபுவையும் மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

இதற்கு அடுத்ததாக மூன்று முடிச்சு சீரியல் 9.95 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நந்தினியை பழிவாங்க வேண்டும் என்று நினைத்த அர்ச்சனா, நந்தினியை கடத்தி வைத்து பரமபதம் ஆடுகிறார். ஆனால் நந்தினி காணாமல் போனதற்கு காரணம் சுந்தரவல்லி தான் என்று நினைத்து சூர்யா அம்மா மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். இதை எல்லாம் தாண்டி நந்தினி எப்படி காப்பாற்றப்படுவார். தொடர்ந்து சுந்தரவல்லியை எப்படி சமாளிக்க போகிறார் என்ற கதையுடன் நாடகம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

அடுத்ததாக சிங்க பெண்ணே சீரியல் கடந்த சில வாரங்களாக நான்காவது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது அன்பு ஆனந்தி ஜோடி ஒன்று சேர்ந்த பிறகு நாடகம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தி விட்டது. அந்த வகையில் இந்த வாரம் 10.03 புள்ளிகளைப் பெற்று விட்ட இடத்தை பிடித்து இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது. இன்னும் இதனைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் முதல் இடத்தை தக்க வைத்து விடும்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் கயல் சீரியல் 10.34 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. புதுசு புதுசாக பிரச்சினை கயலை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அப்பா மீது விழுந்த பழியை போக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் போன கயலுக்கு ஏகப்பட்ட குழப்பங்களும் சரவணன் மூலமாக பிரச்சனைகளும் காத்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கயல் எப்படி சமாளிக்க போகிறார், எழில் கூடவே இருந்து சப்போர்ட் செய்யும் விதமாக கதை நகர்ந்து கொண்டு வருகிறது.

Trending News