வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஞ்சு ஆறு மாதம் வடிவேலுவை குப்புற படுக்க வைத்த சிங்கமுத்து.. வயிறு வலிக்க செய்த 5 படங்கள்

Vadivelu Comedy Movies : சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு படு பிஸியாக நடித்துக் கொண்டு இருந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தனி காமெடி டிராக்காக நடிகர்கள் சிங்கமுத்து, லக்ஷ்மணன், முத்துக்காளை, போண்டாமணி போன்றவர்களுடன் இவர் அடிக்கும் லூட்டி படுஜோராக ஒவ்வொரு படத்திலும் அமைந்திருக்கும். தன்னைத்தானே அடி வாங்க வைத்துக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பதில் வைகைப்புயலுக்கு ஈடே இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் வடிவேலு ஆறு மாதம் எழுந்திருக்கவே முடியாத அளவு அடி வாங்கி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த சில படங்கள்.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி : வடிவேலு முதன்முதலாக ஹீரோவாக நடித்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. இதில் புலிகேசி மாமன்னனாக வரும் வடிவேலுவை பாராட்டி கவி பாடும் கவிஞராக காமெடி நடிகர் சிங்கமுத்து புலவர் பானபத்திர ஓணான்டி என்ற பெயரில் வருவார். முழு நீள நகைச்சுவை படமான இப்படத்தில் சிங்கமுத்து வடிவேலுவை கலாய்த்து கவி பாடியதற்காக அடி வாங்குவார். இதேபோல் தூய தமிழில் படம் முழுவதும் நடித்து பேசி ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார் வடிவேலு.

Also Read : 5 வருடம் கதறவிட்டாலும் திருந்தாத வடிவேலு.. சிங்கமுத்து சொன்னதுலாம் சரிதான் போல

திமிரு : தருண் கோபி இயக்கத்தில் விஷால், ரீமாசென், ஸ்ரேயா ரெட்டி, வடிவேலு நடித்த படம் திமிரு. இதில் மருத்துவ கல்லூரி மாணவராக நடித்திருப்பார் விஷால். மாணவர் தங்கும் ஹாஸ்டல் வார்டனாக நடித்திருப்பார் வடிவேலு. ஹாஸ்டல் பசங்களால் படாதபாடு படுபவராக நடித்து வயிறு வலிக்கு சிரிக்க வைத்திருப்பார் வடிவேலு. ஒரு காட்சியில் சிங்கமுத்துவிடம் வாய் கொடுத்து மாட்டிக்கொள்ளும் வடிவேலை காண்டு தாங்காமல் அவரின் பின்புறத்தில் கடித்து விடுவார். ஆறு மாதம் குப்புற படுக்க வைத்து எந்திரிக்கவே முடியாத அளவு புண்ணாக்கி விடுவார் வடிவேலுவை.

காத்தவராயன் : 2008 இல் வெளியான ஒரு ஆக்ஷன் திரைப்படம் காத்தவராயன். இப்படத்தில் கரண், விதிஷா, வடிவேலு ஆகியோர் நடித்திருப்பார்கள். கிராமத்து கதை பின்னணியில் நகரும் இந்த படத்தில் மற்றதை விட வடிவேலின் காமெடி டிராக் பலமாக அமைந்திருந்தது. வடிவேலு கந்துவட்டிக்கு கடன் கொடுப்பவராக வந்தாலும் கராராக இல்லாமல் மற்றவரிடம் அவரே மாட்டிக்கொண்டு அடிவாங்கும் காட்சிகளை பார்த்து சிரிக்காமல் இருக்கவே முடியாது. திருட வரும் சிங்கமுத்து தன் கூட்டத்துடன் வடிவேலுவை துரத்திப் பிடித்து கடைசியில் அவரிடம் ஒன்றுமே இல்லை என்பதற்காக அவரை அடித்து வெளுப்பார்கள்.

Also Read : பத்து வருஷமா திருப்பி அடித்த கர்மா.. வடிவேலுக்கு இதெல்லாம் பத்தாது என கூறும் பிரபலம்

சத்ரபதி : சரத்குமார், நிகிதா, வடிவேலு நடித்த படம் சத்ரபதி. இதில் ரோடு சைடில் பொருட்கள் விற்பவராக வடிவேலு நடித்திருப்பார். வெவ்வேறு பொருள்களை விற்கும் போதும் மக்களிடம் மாட்டிக் கொண்டு அடி வாங்குவார் வடிவேலு. மூட்டை பூச்சியை கொல்லும் நவீன மெஷின் என்று சிறிய உரல் ஒன்றை விற்பனை செய்து மாட்டிக் கொள்வார். சிங்கமுத்து வாங்கிய புது டெக்னாலஜி மூட்டை பூச்சி கொல்லும் மெஷினா இது என்று பின்னி பெடல் எடுப்பார். அது மட்டும் இல்லாமல் குத்து சண்டை போடுபவரிடம் மாட்டிக் கொள்வார், நாய்களிடம் கடி வாங்குவார், இப்படி பலவாக இந்த படத்தில் மாத்தி மாத்தி அடி வாங்குவார் வடிவேலு.

6.2 : வரிசையாக அடுத்தடுத்து படங்களில் நடித்த சத்யராஜ் வடிவேலுடன் இணைந்து நடித்த படம் 6.2. இப்படத்தில் கால் சென்ட்ரலில் பணிபுரிபவராக சத்யராஜ் நண்பராக வரும் வடிவேலு, சத்யராஜின் லொள்ளு பேச்சில் படம் முழுவதும் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு அடி வாங்குவார். சிங்கமுத்து ஒரு காட்சியில் கருப்பா கட்டையா சுருட்ட முடி வைத்திருப்பவரை தெரியுமானு அவரையே கேட்டு வடிவேலுவை புது ட்ரெண்டில் கலாய்த்து வெளுத்து வாங்குவார். இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் புது விதமாக அனைவரும் வடிவேலுவை பேசி சிக்க வைத்து, எழுந்திருக்க முடியாத அளவுக்கு அடிவாங்கி சிரிக்க வைப்பார் வடிவேலு.

Also Read : கணவர்களின் ஆதிக்கத்தால் 5 நடிகைகளின் கேரியருக்கு வந்த ஆப்பு .. சத்யராஜ் உருட்டிய ஆறடி அரேபிய குதிரை

Trending News