சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சிங்க பெண்ணே: ஆனந்தியை கவிழ்க்க மித்ரா வீசிய சூழ்ச்சி வலை.. கை கொடுத்து காப்பாற்றுவானா அழகன்?

Singapenne Serial: சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியலின் இந்த வார எபிசோடுக்கு ரசிகர்கள் ரொம்பவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கிராமத்தில் இருந்து குடும்ப சூழ்நிலைக்காக சென்னைக்கு வந்த ஒரு அப்பாவி பெண்ணுக்கு இவ்வளவு கஷ்டம் ஏற்பட வேண்டுமா என சீரியல் பார்ப்பவர்களே புலம்பும் அளவுக்கு கடந்த வார எபிசோடு இருந்தது.

குடும்பத்தில் ஏற்பட்ட பண பிரச்சனை காரணமாக கிராமத்தில் ஜாலியாக சுற்றித்திரிந்த ஆனந்தி பொறுப்பை மொத்தமாக தன்னுடைய தலையில் சுமந்து கொண்டு சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஏற்கனவே கம்பெனியில் நிறைய ஊழல்களை செய்து கொண்டிருந்த நபரை கண்டுபிடித்து வெட்ட வெளிச்சம் ஆக்கியதால், அவருடைய கூட்டத்தில் இருந்த அத்தனை பேருக்கும் ஆனந்தியின் மேல் பெரிய கோபத்தில் இருக்கிறார்கள்.

போதாத குறைக்க கம்பெனியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மித்ரா, முதலாளியின் மகன் மகேஷ் மீது காதல் வயப்பட்டு இருக்கிறார். ஆனால் மகேஷ் ஆனந்தி கம்பெனியில் சேர்ந்தது முதல் அவளுடைய நல்ல குணங்களை பார்த்து அவள் மீது ஒரு தலை காதலால் சுற்றிக் கொண்டிருக்கிறான். இது தெரிந்த மித்ரா, ஆனந்தியை எப்படியாவது கம்பெனியை விட்டு துரத்தியே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

ஆனந்தியுடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அன்பு தன்னை யார் என்று வெளிப்படையாக அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் அழகன் என்னும் பெயரில் ஆனந்தியுடன் பேசிக் கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் ஆனந்திக்கும், அழகின் மீது காதல் ஏற்படுகிறது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் தான் கம்பெனியின் 25வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவின் போதே அரவிந்த் ஒரு பக்கம் தன்னுடைய நண்பன் மாயா மூலம் ஆனந்தியை தீர்த்து கட்டுவதற்கு பிளான் செய்து விட்டான். மித்ரா ஒரு பக்கம் கருணாகரனின் உதவியோடு, ஆனந்தியின் கற்புக்கு களங்கம் விளைவித்து மகேஷ் தானாகவே அவளை வெறுக்கும் அளவுக்கு செய்வதற்கு எல்லா திட்டத்தையும் போட்டு விட்டாள். இது தெரியாமல் மித்ராவின் அம்மா அந்த விழாவின்போது அரவிந்த் மற்றும் மித்ராவுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

கை கொடுத்து காப்பாற்றுவானா அழகன்?

மித்ரா இப்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதற்கு சதித்திட்டம் போட்டு விட்டாள். மயக்க மருந்து கலந்த ஜூசை ஆனந்தி மற்றும் அரவிந்துக்கு கொடுத்துவிட்டு இருவரும் ஒரே ரூமில் ஒன்றாக இருக்கும் படி சித்தரித்து அதை மகேஷ் பார்க்க வேண்டும் என்பதுதான் மித்ராவின் பிளான். ஆனால் ஜூஸ் கிளாஸ் கை மாறி இப்போது ஆனந்தி மற்றும் மகேஷ் தான் அந்த மயக்க மருந்து கலந்த ஜூசை குடித்திருக்கிறார்கள்.

மயக்கம் அடைந்த ஆனந்தி பாத்ரூம் சென்று தன் முகத்தை கழுவிக் கொண்டிருக்கும் போது அரவிந்த் செட் பண்ணிய மாயா தண்ணீரில் அவளை மூழ்கடிக்கிறான். அவள் இறந்து விட்டதாக நினைத்து மயக்கம் அடைந்த ஆனந்தியை அப்படியே விட்டு செல்கிறான். ஆனந்தியை அந்த இடத்தில் பார்த்த மித்ரா ஒரு ரூமுக்கு கொண்டு சென்று படுக்க வைக்கிறாள். அதே ரூமுக்கு இப்போது மயக்கம் அடைந்த நிலையில் மகேஷ் சென்று கொண்டிருப்பது போலவும், அழகன் ஆனந்தியை தேடி அலைவதுபோலவும் ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News