Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபல சீரியல்களில் ஒன்றுதான் சிங்க பெண்ணே. இந்த சீரியலை பாதிக்குப் பாதி பேர் விரும்பிப் பார்க்க பெரிய காரணமாக இருப்பவர் தான் அமல்ஜித்.
இவர் இந்த சீரியலில் அன்பு என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனந்தியை ஒருதலையாக காதலித்து, அழகனாக அசத்தினார்.
தற்போது ஆனந்தியின் காதலனாக, அவளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மாசாக கையாண்டு கொண்டிருக்கிறார்.
அன்பு மாதிரி ஒரு காதலன், கணவன் கிடைக்க வேண்டும் என பெண்கள் கமெண்ட் செய்யும் அளவுக்கு இந்த கேரக்டர் இருக்கிறது.
சீரியல் அன்புவின் (அமல்ஜித்) மனைவி
அன்பு மற்றும் ஆனந்தி ஜோடி தற்போதைக்கு சீரியல் ரசிகர்களின் ஃபேவரிட் என்று கூட சொல்லலாம். ஆனந்தி ரீல் ஜோடியாக இருக்க, அமல்ஜித்தின் ரியல் ஜோடி யார் என்பது தெரிய வந்திருக்கிறது .
சன் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கண்ணே கலைமானே சீரியலின் ஹீரோயின் பவித்ரா தான் அது.
பவித்ரா மூன்று வருடங்களுக்கு முன் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான அம்மன் சீரியலில் ஹீரோயின் ஆக நடித்தவர். இதே சீரியல் மூலம் தான் அமல்ஜித் தமிழ் சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார்.
இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்களுக்குள் காதல் மலர்ந்திருக்கிறது.
அந்த சமயத்தில் அம்மன் சீரியலை விரும்பி பார்த்தவர்கள் இந்த ஜோடியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.