வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

எதிர்நீச்சல் சீரியல் மாதிரி, சிங்கப்பெண்ணே சீரியலுக்கு ஏற்பட்ட சிக்கல்.. விலகிய முக்கிய கேரக்டர்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் மற்றும் சிங்க பெண்ணே சீரியல்கள் ஒரு காலகட்டத்தில் போட்டி போட்டுக் கொண்டு டி ஆர் பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்தன. தற்போது சிங்க பெண்ணே சீரியல் நிரந்தரமாக முதலிடத்தில் இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியலின் பின்னடைவுக்கு யார் காரணம் என்பதை எல்லோருக்குமே தெரியும். ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து இறந்த பிறகு அந்த சீரியலை முன்னுக்கு எடுத்து செல்வதே பெரும் போராட்டமாக இருக்கிறது.

கிட்டத்தட்ட பல மாதங்கள் ஆகியும் வேலராமமூர்த்தி, ஆதி குணசேகரன் கேரக்டரின் நடிப்பது யாருக்கும் செட்டாகாது போலவே இருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் சிங்கம் போல் முதலிடத்தில் இருக்கும் சிங்க பெண்ணே சீரியலுக்கும் இந்த ஆபத்து வந்திருக்கிறது.

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு குடும்ப சூழ்நிலையால் வரும் ஆனந்தி சென்னையில் சந்திக்கும் பல பிரச்சனைகளை எடுத்துச் சொல்வது தான் இந்த நாடகத்தின் கதை. அன்பு, மகேஷ், நந்தா என இப்போது முக்கோண காதல் கதையில் சிக்கிக் கொண்டு இருக்கிறது இந்த சீரியல்.

இந்த சீரியலில் முக்கியமான கேரக்டர்கள் என்று சொன்னால் ஆனந்தியுடன் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் ரெஜினா, காயத்ரி மற்றும் சல்மா தான். இவர்கள் மூன்று பேருக்கும் தனியாக ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அதிலும் ரெஜினா கேரக்டரில் நடித்த ஜீவிதாவுக்கு இளைஞர் பட்டாளம் பயங்கர வரவேற்பு கொடுத்து கொண்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஜீவிதா சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். வேறு ஒரு சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது தான் இதற்கு காரணம் என அவரே சொல்லி இருக்கிறார்.

கால்ஷீட் பிரச்சினை காரணமாக சிங்க பெண்ணே மற்றும் இந்திரா இரண்டு சீரியல்களில் இருந்தோம் விலகிக் கொள்வதாக சொல்லி இருக்கிறார். இனி சிங்க பெண்ணே சீரியலில் ரெஜினா கேரக்டரில் VJ கல்யாணி நடிக்க இருக்கிறார்.

ஜீவிதாவுக்கு பதிலாக ரெஜினா கேரக்டரில் நடிக்க இருக்கும் VJ கல்யாணி

சீரியல்களை பொருத்தவரைக்கும் திடீரென ஒரு கேரக்டர் மாறிவிட்டால் அந்த நாடகம் டல்லடிக்க ஆரம்பித்து விடும். கல்யாணி இந்த ரெஜினா கேரக்டருக்கு எந்த அளவில் பொருந்துகிறார் என இனிவரும் எபிசோடுகளில் பார்ப்போம்.

சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்

Trending News