வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிங்கப்பெண்ணில் அரைச்ச மாவையே அரைக்கும் டைரக்டர்.. மூன்று முடிச்சு, சுந்தரி சீரியல் எல்லாம் ஓவர் டேக் பண்ணிட்டு போகுது!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் 300 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. இத்தனை எபிசோடுகள் கடந்து இதுவரைக்கும் சீரியலில் யார் யாருக்கு ஜோடி என்பதே பெரிய சந்தேகமாக இருக்கிறது. எல்லா நாடகத்திலும் முதல் எபிசோடிலேயே இவங்க தான், இவங்க கூட சேருவாங்கன்னு ஓரளவுக்கு கணித்து விட முடியும்.

ஆனால் இந்த சீரியல் முடியும்போது தான் அந்த உண்மை தெரியவரும் போல. கிராமத்தில் இருந்து குடும்ப கஷ்டத்திற்காக சென்னைக்கு வரும் பெண் தன்னுடைய பிரச்சனைகளை எல்லாம் தாண்டி எப்படி வந்த நோக்கத்தை முடிக்கிறார் என்பதுதான் சிங்க பெண்ணே சீரியலின் கதை.

அன்பு என்ற கேரக்டர் வரும்போது சரி இவங்க ஆரம்பத்தில் மோதி அதன் பின்னர் காதலில் விழுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின்னர் நடுவில் மகேஷின் காதல், மகேஷ் மீது மித்ராவின் ஒரு தலை காதல் என ஒட்டுமொத்தமாக இந்த லவ் சப்ஜெக்ட்டுக்குள் இப்போது நான்கு பேர் இருக்கிறார்கள்.

அன்பு நான்தான் அழகன் என்று சொன்ன பிறகு அடுத்தடுத்து நடக்கும் பிரச்சினைகளை சொன்னால் கொஞ்சமாக அது சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இதுவரை நான் தான் அழகன் என்று அன்பு சொல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

அரைச்ச மாவையே அரைக்கும் டைரக்டர்

அது மட்டும் இல்லாமல் ஒரு பக்கம் மகேஷின் அப்பா அவனுக்கு டார்ச்சர் கொடுக்க, இன்னொரு பக்கம் அன்புவின் அம்மா அன்புக்கு அவனுடைய அத்தை பெண்ணை தான் திருமணம் செய்து வைப்பேன் என காரணம் இல்லாமல் அடம் பிடிக்க இப்போது சீரியல் ரொம்ப தொய்வு நிலையில் இருக்கிறது.

ஒரு காலகட்டத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியலுக்கு பின்னால் இருந்த மூன்று முடிச்சு மற்றும் சுந்தரி சீரியல்கள் இப்போது முந்தி அடித்துக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கின்றன. அன்பு தான் அழகன் என தெரிந்த பிறகு ஆனந்தி எடுக்கப் போகும் முடிவுகள் எல்லாம் இந்த சீரியலில் பிச்சு கொண்டு போகும்.

ஆனால் அதை ஏன் அந்த இயக்குனர் இதுவரை தெரியப்படுத்தாமல் இருக்கிறார் என தெரியவில்லை. ஒவ்வொரு வாரமும் ஆனந்திக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வரும், அதிலிருந்து அவளை அன்பும் மற்றும் மகேஷ் காப்பாற்றுவார்கள்.

இந்த வாரம் கொஞ்சம் புதுசாக ஆனந்தியின் தோழி காயத்ரிக்கு பிரச்சனை வருவது போல காட்டப்பட்டிருக்கிறது. இப்போது ஆனந்தி, அன்பு, மகேஷ் மூவரும் இணைந்து காயத்ரியை காப்பாற்றுவார்கள் போல.

போதாத துறைக்கு ஆனந்திக்காக வீட்டு பத்திரத்தை பேங்கில் அடமானம் வைக்க அன்பு துணிந்த விஷயம் அவனுடைய அம்மாவுக்கு தெரிந்து விட்டது. மேலும் மகேஷ் ஆனந்தியை ரொம்ப காதலிப்பதை அன்பு முத்துவிடம் சொல்லிவிட்டான். இதிலிருந்து ஏதாவது ஒரு மாற்றம் வருகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News