வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஆனந்தியை பறி கொடுத்த அன்பு.. மொத்தமாய் சொதப்பி உருட்டும் சிங்கப்பெண்ணே சீரியல்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்களே வெறுப்பாகும் அளவிற்கு இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக நந்தாவை போலியான அழகனாக நடிக்க வைத்து போதும் போதும் என்கிற அளவிற்கு எபிசோடை ஓட்டினார்கள்.

அது மட்டுமல்லாமல் மகேஷ் அப்பா அம்மா கல்யாண விழா நாளில் நந்தாவுக்கும் ஆனந்திக்கும் திருமணம் நடக்குமா நடக்காதா என்பதை வைத்து கடந்த வாரம் முழுக்க அரைச்ச மாவையே அரைத்து தள்ளினார்கள். எப்படியும் கடைசி நிமிஷம் அன்பு வந்து ஆனந்தியை காப்பாற்றுவான் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.

அதை தாண்டி நான் தான் அழகன் என அன்பு ஆனந்தியிடம் சொல்வானா என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அப்படி எதிர்பார்த்தவர்களுக்கு இன்றைய எபிசோடு பெரிய ஏமாற்றத்தை தான் கொடுக்கும். பழக்கம் போல அன்பு தன்னுடைய வீர சாகசத்தை காட்டி ஆனந்தியை நந்தாவிடமிருந்து காப்பாற்றி விடுகிறான்.

மொத்தமாய் சொதப்பி உருட்டும் சிங்கப்பெண்ணே சீரியல்

அதே நேரத்தில் அந்த இடத்திற்கு வரும் மகேஷ் ஆனந்தியையும் அவளுடைய தோழிகளையும் தன்னுடைய காரில் கல்யாண பார்ட்டிக்கு கூட்டிட்டு போவது போல் புரோமோ இருக்கிறது. எப்படியும் மகேஷ் தன் அப்பா அம்மாவிடம் இன்று ஆனந்தியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதை தான் சொல்லப் போகிறான்.

இதற்கு ஆனந்தி வழக்கம் போல ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி முழித்துக் கொண்டு தான் இருப்பாள். எதற்காக இந்த ஆனந்திக்கு சிங்கப்பெண்ணே என்ற பெயர் வைத்த இந்த சீரியலை ஓட்டுகிறார்கள் என்றே தெரியவில்லை.

ஆனந்தியின் கேரக்டரை பார்க்கும்போது கண்டிப்பாக சிங்கப்பெண் டைட்டில் எல்லாம் அவருக்கு செட்டாகாது. நந்தாவிடமிருந்து பாடுபட்டு காப்பாற்றி ஆனந்தியை தற்போது மகேஷிடம் பறிகொடுத்து இருக்கிறான் அன்பு.

சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்

  • அன்புவின் போராட்டம் ஜெயிக்குமா?
  • நந்தாவை கல்யாணம் செய்ய மணமேடை வரை வந்த ஆனந்தி
  • வந்த வேலையை முடித்துவிட்டு எஸ்கேப் ஆன நந்தா

Trending News