ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Singapore Saloon Review – சிங்கப்பூர் சலூனை வைத்து ஆர்ஜே பாலாஜியால் சாதிக்க முடிந்ததா.? சுடச்சுட வெளிவந்த முழு விமர்சனம்

Singapore Saloon Movie Review : கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் ஆகியோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி இருக்கிறது. படத்தின் ஒன் லைன் ஸ்டோரி படித்த வேலை செய்வதை காட்டிலும் பிடித்த வேலை செய்வது தான்.

சிறுவயதிலேயே நண்பர்களாக இருக்கிறார்கள் ஆர் ஜே பாலாஜி மற்றும் கிஷன் தாஸ். அப்போது அவர்களது கிராமத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற கடையை நடத்தி வருகிறார் லால். அவர் ஹேர் ஸ்டைல் செய்யும் விதத்தை பார்த்து ஆர் ஜே பாலாஜிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆனால் தந்தையின் கட்டாயத்தின் பெயரில் இன்ஜினியரிங் படிக்கிறார்.

மேலும் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்த போதும் சலூன் கடை மீது உள்ள விருப்பத்தால் இந்த வாய்ப்பை விடுகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஆர்ஜே பாலாஜி கஷ்டப்பட்டு 5 கோடி செலவில் சிங்கப்பூர் சலூன் என்ற கடையை திறக்கிறார். அதனால் அவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது.

Also Read : வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஆர்ஜே பாலாஜி.. ரணகளமாக வந்திருக்கும் சிங்கப்பூர் சலூன் ட்விட்டர் விமர்சனம்

கடைசியில் தான் விருப்பப்பட்டு செய்த தொழிலில் ஆர்ஜே பாலாஜி சாதித்தாரா என்பது தான் சிங்கப்பூர் சலூன் படத்தின் கதை. படத்தின் ஆரம்பம் சத்யராஜின் கலகலப்பான காமெடி உடன் சென்றதால் ரசிகர்களை கவர்ந்தது. இரண்டாம் பாதி முழுக்க எமோஷனலாகவே சென்றது.

கதாநாயகி மீனாட்சி சவுத்ரி சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றுள்ளார். படத்தில் பாடல்கள் எதுவும் பெரிய அளவில் கவனம் இருக்கவில்லை. மேலும் ஆர்.ஜே பாலாஜியை தாண்டி சத்யராஜ் படத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். சிங்கப்பூர் சலூன் படம் ஆவரேஜ் என்டர்டைன்மென்ட் படமாக அமைந்திருக்கிறது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.25/5

Trending News