வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

எம்மோடியோ! வாயடைக்க வைத்த பவதாரணி சொத்து மதிப்பு.. மரணத்திற்கு முன்பே கொடுத்த இன்ப அதிர்ச்சி

Singer Bhavatharini Ilaiyaraaja net worth: கோலிவுட்டில் பல தலைமுறைகள் பேசக்கூடிய பாடல்களைத் தந்து இசை அரசராக பார்க்கப்படும்  இசைஞானி இளையராஜாவின் மகள் தான் பாடகி பவதாரணி. இவர் 30 படங்களில் நிறைய பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் 10 படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார். இவருடைய தனித்துவமான குரல் வளத்தால் அடையாளம் காணப்பட்டார்.

சில தினங்களுக்கு முன்பு 47 வயதான பவதாரணி கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். இவரது மறைவு ரசிகர்களை மட்டுமல்ல திரை பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சில நாட்களாகவே பவதாரணியை பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. பாடகி பவதாரணி கடந்த 2005 ஆம் ஆண்டு சபரி ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சபரி ராஜன் ஹோட்டல் பிசினஸ் செய்து வருகிறார்.

இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், தனது சொத்துக்களை எல்லாம் அவருடைய மனைவி பவதாரணி பெயரில் தான் வாங்கி உள்ளார். மேலும்  பவதாரணியும் பாடகியாகவும் இசையமைப்பாளராகவும்  சம்பாதித்து வந்திருக்கிறார். பவதாரணி அவருடைய தந்தை இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகள் கிடைத்தது. இப்படி தொடர்ந்து பல பாடல்களை தன்னுடைய தனித்துவமான குரலால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

Also Read: நான் தமிழன் இல்லன்னு மீண்டும் நிரூபித்த ரஜினி.. பணத்துக்காக ரெட்டை வேஷம் போடும் சூப்பர் ஸ்டார்

இளையராஜாவின் மகள் பவதாரணி சொத்து மதிப்பு

தற்போது பவதாரணியின் சொத்து மதிப்பு மட்டும் 300 முதல் 350 கோடி ரூபாய் பெரும். மேலும் பவதாரணி இறப்பிற்கு முன் அவருக்கு இருக்கும் புற்றுநோயின் தீவிரம் தெரிந்து  கொண்டதால், சிகிச்சைக்கு இலங்கை போவதற்கு முன்பே தன்னுடைய தந்தை, தம்பிகளான பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, அண்ணன் கார்த்திக் ராஜா, சித்தப்பா கங்கை அமரன் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்டிருக்கிறார்.

அதுமட்டுமல்ல ‘செத்தா ஆறடி மட்டும்தான் மிஞ்சும்’ என்பதால் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு மிகவும் பிடித்தமான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சியும் கொடுத்துவிட்டு தான் பவதாரணி இந்த மண்ணை விட்டு சென்று இருக்கிறார்.  

Also Read: சோகத்தில் முடிந்த 18 வருட திருமண வாழ்வு.. பவதாரணியை காப்பாற்ற கடைசிவரை போராடிய கணவரின் புகைப்படம்

Trending News