சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

குடிபோதையால் விபத்து.. இரண்டு குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பாடகி சின்மயி!

Singer Chinmayi: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வந்த சின்மயி, தற்போது வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்றில் குடிபோதையால் இரண்டு குழந்தைகளுடன் விபத்தில் சிக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அபிராமிபுரத்தில் வந்து கொண்டிருந்தபோது நன்கு குடித்து விட்டு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அவருடைய காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் அவருடைய இடதுபுறம் பயங்கரமாக அடி வாங்கியது.

Also Read: இருக்கும் இடம் தெரியாமல் போன 5 பாடல் ஆசிரியர்கள்.. பெயரை கெடுத்து சின்னா பின்னமாக்கிய சின்மயி

இந்த விபத்து நடந்த உடன் அவருடைய இரட்டைக் குழந்தைகள் மற்றும் அவர்களைப் பார்த்துக் கொள்பவரும் பத்திரமாக இறங்கினர். இந்த விபத்து நடந்த போது அந்த இடத்திலிருந்து அக்கம் பக்கத்தினர் உதவி புரிய ஓடி வந்தனர். ஒரு நல்ல மனிதர் அந்த ஆட்டோ ஓட்டுநரை பின் தொடர்ந்து சென்றார். ஆனால் அவரால் அந்த போதை ஆசாமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து புகார் கொடுக்கவும் சின்மயிக்கு மனம் வரவில்லை. அப்படியே புகார் கொடுத்தாலும் அதனால் எந்த யூசும் இல்லை. என்னுடைய குழந்தைகள் பத்திரமாக இருக்கின்றனர், எனக்கு அது போதும். ஆனால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களின் கை கால்களை உடைக்க வேண்டும். ஒரு பெற்றோராக எனக்கு அந்த அளவிற்கு ஆத்திரம் வருது என்று ஆவேசத்துடன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: Me too புகாரை வெளிப்படையாக போட்டு உடைத்த 5 நடிகைகள்.. ஆட்டோ டிரைவரால் ஹீரோயின் அனுபவித்த டார்ச்சர்கள்

அது மட்டுமல்ல குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்துவுக்கு எழுப்பிய மீ டூ சர்ச்சை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சின்மயி பாடகி மட்டுமல்ல, பல நடிகைகளின் படங்களில் டப்பிங் பேசியுள்ளார். ஆனால் இந்த மீ டூ சர்ச்சை எழும்பியவுடன் அவரை திரையுலகமே ஒதுக்கி வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனால் அவருக்கு பாடல்கள் பாடும் வாய்ப்பு டப்பிங் பேசவும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதை அவரே பல இடங்களில் வெளிப்படையாக பேசினார். மேலும் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநரால் விபத்தில் சிக்கியதை குறித்து வெளியிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also Read: யாருக்கும் தெரியாத 5 முக்கிய நடிகர்களின் இன்னொரு முகம்.. கணவருக்காக தொழிலை மாற்றிய சுஹாசினி

Trending News