பின்னணி பாடகி சித்ரா மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமிய, வங்காளம் போன்ற இந்திய மொழிகளில் பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் ஆறு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், ஆறு முறை பிலிம்பேர் விருதுகளையும் வாங்கியிருக்கிறார். இவரின் திறமையான குரல் வளத்தால் இவரை ‘சின்னக்குயில்’ சித்ரா என்று அழைக்கின்றனர்.
பாடல்கள் பாடுவதை தாண்டி சித்ராவின் அமைதியான குணமும், கனிவான பண்பும் தான் அவரை எல்லாருக்கும் பிடிப்பதற்கு முக்கிய காரணம். சித்ராவை எப்போதுமே சிரித்த முகத்துடனே தான் பார்க்க முடியும். ஆனால் இவருடைய வாழ்க்கையில் மற்றுமொரு சோகமான பக்கமும் இருக்கிறது. ஆனால் இந்த சோகத்தை அவர் எப்போதுமே வெளிக்காட்டுவதில்லை.
Also Read: ஜானகி ஃபில்ட் அவுட்டாக காரணமாக இருந்த பாடகி.. பாலச்சந்தரால் மறுக்கப்பட்ட வாய்ப்புகள்
பாடகி சித்ரா 1988 ஆம் ஆண்டு விஜய்சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த இவருக்கு, 15 வருடங்கள் கழித்து 2002 ஆம் ஆண்டு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை மற்ற குழந்தைகள் போல் இல்லாமல் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையாக இருந்தது.
இருந்தாலும் பாடகி சித்ரா தன் குழந்தையை சாதாரண குழந்தைகளைப் போலவே பராமரித்து வளர்த்து வந்தார்.சென்னையில் ஒரு பள்ளியில் படிக்க வைத்து நல்ல முறையில் வளர்த்து வந்தார் சித்ரா. நந்தனாவுக்கு எட்டு வயது நிரம்பிய நிலையில் துபாயில் நடைபெற்ற ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் தன் பெண்ணை அறிமுகப்படுத்த ஆசைப்பட்ட சித்ரா அங்கு அழைத்துச் சென்றார்
Also Read: என்னால் பிறரையும் கொல்லாதீர்கள்: பாடகி ஜானகி
ஆனால் அங்கு துரதிர்ஷ்டவசமாக ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் தவறுதலாக விழுந்த குழந்தை மூச்சு திணறி இறந்தது. இந்த இழப்பை தாங்க முடியாத சித்ரா பதினைந்து வருடம் கழித்து கடவுள் கொடுத்த குழந்தையை அவரே எடுத்துக்கொண்டார் என்று புலம்பி அழுதார். மொத்த திரையுலகமும் சித்ராவுக்கு ஆறுதல் சொல்லி தேற்றியது.
அதன் பிறகு சித்ரா வேறு ஒரு குழந்தையை பெற்றெடுக்கவும் இல்லை, வேறு குழந்தையை தத்தெடுக்க மனமும் வரவில்லை. இதற்கு காரணம் கணவன் மனைவி இருவருக்குமே வயதாகிவிட்டது . இன்றுவரை சித்ராவும் அவரது கணவரும் தனிமையில் வாழ்ந்து வருகிறார்கள். சித்ராவுக்கு இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டாலும் இதுவரை அந்த சோகத்தை எந்த இடத்திலும் காட்டியது கிடையாது.
Also Read: ஒரே பாட்டுக்கு 2 நேஷனல் அவார்டா.! பாட்டு மட்டும் இல்லைங்க படமும் அப்படி இருக்கும்