ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கே பாலச்சந்தர் சாகுற வரைக்கும் அப்படிப்பட்ட ஆள் தான்.. நீண்டு கொண்டே போகும் சுசித்ராவின் லிஸ்ட்

Suchithra: ஒரு காலத்தில் தன்னுடைய குரலால் ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருந்தவர் பாடகி சுசித்ரா. இப்போது எப்ப வாயை தொறந்து, யாரை பற்றி என்ன பேசுவாங்கனு யாராலுமே யூகிக்க முடியவில்லை. நடிகர் தனுஷிடம் ஆரம்பித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்கத்தையும் வீதிக்கு கொண்டு வந்து விட்டார்.

சமீபத்தில் மலையாள சினிமா உலகில் நடந்த மீ டூ புகார்கள் பற்றியும் சுசித்ரா நிறைய விஷயங்களை பேசியிருந்தார். விஜய் டிவியின் தொகுப்பாளிகளான மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை பற்றியும் சுசித்ரா பேசியிருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் கவிப்பேரரசு வைரமுத்து பற்றி சமீபத்தில் இவர் சொன்ன குற்றச்சாற்று கோவத்தை கிளப்பியதோடு, அவர் பேசிய விதம் வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்திருந்தது. எத்தனையோ பெயர்கள், பட்டங்கள் வாங்கிய வைரமுத்துவை ‘பேண்டின்’ முத்து என்று கிண்டலடிக்கும் அளவுக்கும் தற்போது சுசித்ரா செய்து விட்டார்.

கே பாலச்சந்தர் சாகுற வரைக்கும் அப்படிப்பட்ட ஆள் தான்

இப்போது இருக்கும் நபர்களை பற்றி மட்டும் பேசாமல் மறைந்த இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் பற்றியும் ஒரு திடுக்கிடும் தகவலை சொல்லியிருக்கிறார். பாலசந்தர் பெண்கள் விஷயத்தில் தவறான எண்ணம் கொண்டவர் என்றும், சாகும் வரை அவர் அந்த குணத்தோடு தான் இருந்தார் என்றும் பேசியிருக்கிறார்.

இவர் பேசிய இந்த விஷயம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களை எடுத்தவர் பாலச்சந்தர்.

அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை , கல்கி போன்ற திரைப்படங்களே இதற்கு சாட்சி. அப்படிப்பட்ட இயக்குனர் இந்த மாதிரி குணம் கொண்டவர் என சுசித்ரா சொன்னது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.

Trending News