Jayam Ravi: கடந்த சில வருடங்களாகவே நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து தமிழ் சினிமாவில் பெரிய பஞ்சாயத்தாக இருக்கிறது. உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திரங்கள் திடீரென விவாகரத்து செய்து பிரிந்து விடுகிறார்கள்.
நாக சைதன்யா சமந்தா, தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ் சைந்தவி போன்றவர்களின் விவாகரத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தற்போது இந்த லிஸ்டில் நடிகர் ஜெயம் ரவியின் பெயர் அடிபடுகிறது.
அவரை தவிர மற்ற எல்லோருமே இந்த விவாகரத்தை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆரம்பத்தில் இது வதந்தி தான் என நினைக்கப்பட்டது. இதற்கு காரணம் சமீப காலத்தில் ஜெயம் ரவி அவருடைய மனைவியை பற்றி பெருமையாக பேசிய நிறைய பேட்டிகள் தான்.
ஜெயம் ரவி மனைவி பற்றி பகீர் கிளப்பிய சுசித்ரா
இருந்தாலும் ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவியுடன் இருந்த எல்லா புகைப்படங்களையும் நீக்கியதோடு, அவரை அன்பாலோ செய்து விட்டார். இதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவது உறுதி என பேசப்படுகிறது.
ஒரு பக்கம் ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு காரணம் ஆர்த்தியின் அம்மா மற்றும் அவருடைய வளர்ப்பு மகன் ஷங்கர் என கூறப்படுகிறது இந்நிலையில் பாடகி சுசித்ரா ஜெயம் ரவியின் மனைவி பற்றி ஒரு சில விஷயங்களை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
ஜெயம் ரவி குடும்பம் படிப்படியாக கஷ்டப்பட்டு முன்னேறிய குடும்பம். இதனால் அவர்களுக்கு மற்றவர்களை மதிக்க தெரியும். ஆனால் ஆர்த்தி பரம்பரையாகவே பணத்தில் செழிப்பாக வளர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் இடையே கண்டிப்பாக செட்டாகாது.
ஆரம்பத்தில் அவருடைய அழகுக்காக காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜெயம் ரவி. ஆனால் அழகை வைத்து எத்தனை நாள் குடும்பம் நடத்த முடியும், கேரக்டர் ரொம்பவும் முக்கியம். ஆர்த்தி ரொம்பவும் ஆடம்பரமாக வாழக்கூடியவர்.
ஜெயம் ரவி அதற்காக இரவு பகலாக உழைக்க வேண்டும். சமீப காலமாக அவருக்கு படங்கள் சரிவர போடவில்லை. இதுதான் இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் என சொல்லி இருக்கிறார்.
மனைவியை பிரிய தயாராகும் ஜெயம் ரவி
- சும்மா இருந்த மீடியாவை சொறிஞ்சு விட்ட ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி
- வாயும் வயிறும் வேறன்னு மாமியார் கிட்டயே டீல் பேசிய ஜெயம் ரவி
- ஜெயம் ரவி நிலைமையை நம்பி அவ்வளவு கோடிகள் போட முடியாது