வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அம்மா நடிகைகளுக்கு கூட டார்ச்சர் கொடுப்பார்.. தனுஷ், நயன் விவகாரத்தில் குறுக்க வந்த சுசித்ரா

Dhanush: சனி ஞாயிறு வந்துட்டா போதும் சின்ராச கையிலயே பிடிக்க முடியாது. சூரியவம்சம் படத்தில் இப்படி ஒரு டயலாக் வரும். அப்படித்தான் பாடகி சுசித்ரா ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்பினால் முதல் ஆளாக கருத்து சொல்ல வந்து விடுவார்.

அதிலும் தனுஷ் என்றால் கேட்கவே வேண்டாம். சரமாரியாக திட்டித் தீர்ப்பதோடு பல கன்டென்ட் கொடுத்து மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி விடுவார். அப்படித்தான் நேற்றிலிருந்து தனுஷ் நயன்தாரா பிரச்சனை அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. சில நடிகைகள் நயனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேபோல் நெட்டிசன்கள் தனுசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சுசித்ரா வழக்கம் போல ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் தனுஷ் தனக்கு பிடிக்கவில்லை என்றால் சக நடிகைகளை பயங்கரமாக டார்ச்சர் செய்வார் என குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டும் இன்றி அம்மா நடிகைகளை கூட இப்படித்தான் டார்ச்சர் செய்வார் என அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு விதமான டார்ச்சர் இருக்கும்.

தனுஷ் மீது குற்றச்சாட்டு வைக்கும் சுசித்ரா

சிலருக்கு அந்தரங்க தொல்லை சிலரை தொழில் ரீதியாக தாக்குவது சிலரின் இமேஜை உடைப்பது என தனுஷ் மோசமாக நடந்து கொள்வார் என சுசித்ரா கூறி இருக்கிறார். மேலும் தனுஷ் ஒரு சைக்கோ என்பதால் இது போன்ற பல டார்ச்சர்களை நடிகைகளுக்கு கொடுப்பார் என தெரிவித்துள்ளார்.

அது மட்டும் இன்றி படுமோசமாக அவரை திட்டியும் இருக்கிறார் சீக்கிரமா செத்துடு என அவதூறான வார்த்தைகளை அவர் உபயோகப்படுத்தி இருப்பது தற்போது கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது.

தனுஷ் மீது என்ன வன்மம் இருந்தாலும் சோசியல் மீடியாவில் இப்படி பேசுவது சரி கிடையாது என ரசிகர்கள் ஆத்திரப்பட்டு வருகின்றனர். இப்படி தன்னை பற்றி கடும் விமர்சனங்கள் இருந்தாலும் தனுஷ் எதற்கும் விளக்கம் அளிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை.

Trending News