சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

Dhanush: செஞ்ச பாவத்துக்கு தான் தனுஷ் இப்ப அனுபவிக்கிறாரு.. சுச்சி லீக்ஸ் ஒரு திருட்டு வேலை, அம்பலப்படுத்திய சுசித்ரா

Dhanush: இன்று காலையிலிருந்தே ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரின் விவாகரத்து செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதே சமயம் பாடகி சுசித்ராவின் பேட்டியும் அதிர்வலையை கிளப்பி இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க போட்டோக்கள் வெளியானது. பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரத்தில் சுசித்ரா மீதுதான் குற்றச்சாட்டு இருந்தது.

அதை அவர் மறுத்து வந்த நிலையில் தற்போது பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார் அதன்படி சுச்சி லீக்ஸ் ஒரு பிராங்க். தனுஷ், சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக், ஆண்ட்ரியா, விஜய் யேசுதாஸ் என ஒரு பெரிய குரூப்பே இதில் இருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து இரவு முழுவதும் படம் பார்ப்பது உட்பட இன்னும் சில வேலைகளையும் செய்வார்கள். அப்படி அவர்கள் ஆரம்பித்தது தான் இந்த சுச்சி லீக்ஸ். அதற்கு ஒருவருடைய சோசியல் மீடியா ஐடி தேவைப்பட்டது.

சுச்சி லீக்ஸ் பின்னணி

அதனால் கார்த்திக் என்னுடைய ஐடியை பெருந்தன்மையாக கொடுத்து விட்டார். அதை வைத்து தான் ஒவ்வொரு போட்டோவையும் அவர்கள் வெளியிட்டார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்களே அந்த போட்டோவை கொடுத்தது தான் ஹைலைட்.

திரிஷா போட்டோ வெளியானது கூட அவருக்கு தெரிந்து தான் நடந்தது. இதையெல்லாம் பரவ விட்டு அதனால் நடக்கும் சர்ச்சைகளை பார்த்து இவர்கள் ரசித்து சிரிப்பார்கள்.

அதில் பலிகடா ஆனது நான்தான். அதன் காரணமாகவே நான் கார்த்திக்கை விவாகரத்து செய்தேன் என சுசித்ரா குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் எனக்கு செய்த பாவத்துக்கு தான் தனுஷ் இப்போ விவாகரத்து வரை வந்திருக்கிறார் என கூறியுள்ளார்.

இது நம்ப முடியாத ஆச்சரியமாக இருக்கிறது. ஆக மொத்தம் விளையாட்டு என்ற பெயரில் நடத்தப்பட்ட லீலைதான் இந்த சுச்சி லீக்ஸ். இதன் மூலம் வெளியுலகில் மாஸாக வலம் வரும் பிரபலங்களின் நிஜ முகமும் தெரிய வந்துள்ளது.

Trending News