Serial Trp Rating List: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் வெளி வருகின்ற டிஆர்பி ரேட்டிங் இன் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்களை பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.
மருமகள்: ஆதிரைக்கும் பிரபுவுக்கும் கல்யாணம் ஆன பிறகு சண்டை சச்சரவுகள் வந்த நிலையில் தற்போது புதுசு புதுசாக பிரச்சினைகள் வரும் அளவிற்கு இரண்டு பேரும் அல்லல்பட்டு வருகிறார்கள். அதிலும் இவர்களுடைய ஒற்றுமையை காணவில்லை என்பதற்கு ஏற்ப எதிரும் புதிருமாக இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.15 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கிறது.
சிறகடிக்கும் ஆசை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் இந்த ஒரு சீரியல்தான் முதல் ஐந்து இடத்திற்குள் மாத்தி மாத்தி வந்து கொண்டிருக்கிறது. அதிலும் ஆரம்பத்தில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த சீரியல் தற்போது நான்காவது இடத்தில் மட்டும் இருக்கும்படி நிலைமை இருக்கிறது. இதற்கு காரணம் ரோகிணி பற்றிய ரகசியங்கள் எதுவும் வெளிவராமல் தப்பித்துக் கொண்டே வருவதால் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் போர் அடித்து விட்டது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.25 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
கயல்: தேவி வளைகாப்புக்கு விக்னேஷ் வருவார் என்று கயல் வாக்கு கொடுத்த நிலையில் ஒரு வழியாக வேதவள்ளி சூழ்ச்சியிலிருந்து தப்பிய விக்னேஷ் வளைகாப்புக்கு வந்து விடுகிறார். இதற்கு பிறகு தேவிக்கு குழந்தை பிறக்குமா அல்லது இன்னும் வருஷக்கணக்கில் இழுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.14 புள்ளிகளைப் பற்றி மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
சிங்கப் பெண்ணே: தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வந்த சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் 9.21 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திற்கு பின்தங்கி இருக்கிறது. இதற்கு காரணம் ஆனந்தி அன்பு காதலை விட மகேஷ் காதல் பெருசு என்கிற மாதிரி கதை நகர்கிறது. என்னுடைய காதலி எனக்கு வேண்டும் என்று அடாவடித்தனமாக மகேஷ் கேரக்டர் எல்லை மீறி கொண்டு போகிறது. இதனால் அன்பு மற்றும் ஆனந்தி பாதிப்படைந்த நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் கொஞ்சம் சரிவை சந்தித்திருக்கிறது.
மூன்று முடிச்சு: சூர்யாவை நிரந்தரமாக குடிப்பழக்கத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று நந்தினி எடுத்த முயற்சியில் அர்ச்சனாவின் சூழ்ச்சி நந்தினியை பெரும் துன்பத்தில் தள்ளி விட்டது. இதனால் சுந்தரவல்லி கோபத்திற்கு ஆளான நந்தினி மணமடைந்து ஆறுதலுக்கு கூட பக்கத்தில் யாரும் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.22 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.