வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் இரண்டாவது நாள் வசூல்.. யாருக்கு அடித்தது ஜாக்பாட்

Singpore Saloon, Blue Star 2nd Day Collection : தொடர் நான்கு நாள் விடுமுறையை முன்னிட்டு ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் மற்றும் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் படங்கள் வெளியாகி இருந்தது. காமெடி படங்கள் என்றால் பின்னி பெடல் எடுக்கும் ஆர்.ஜே பாலாஜி சிங்கப்பூர் சலூன் படத்திலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் எமோஷன் காட்சிகளிலும் அவரது நடிப்பு பிரமாதமாக இருந்துள்ளது. இந்நிலையில் பேமிலி என்டர்டைன்மென்ட் படமாக இருந்தாலும் பாதியில் சற்று தொய்வு காணப்பட்டது. ஆனாலும் வசூலை பொருத்தவரையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.

அந்த வகையில் முதல் நாளில் ஒரு கோடி வசூல் செய்த நிலையில் நேற்றைய தினம் இரண்டாவது நாள் முடிவில் 1.64 கோடி வசூல் செய்திருக்கிறது. இதை ஒப்பிடும்போது அசோக் செல்வன் மற்றும் சாந்தனு கூட்டணியில் வெளியான ப்ளூ ஸ்டார் படம் வசூல் ரீதியாக தொய்வில் தான் இருக்கிறது.

Also Read : மினிமம் கேரண்டி சக்சஸ் ஹீரோன்னு பேர் வாங்கிய அசோக் செல்வனின் 6 படங்கள்.. சர்ச்சையில் சிக்கிய சபாநாயகன்

விமர்சன ரீதியாக ப்ளூ ஸ்டார் படத்திற்கு தொடர்ந்து பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. ஆனாலும் முதல் நாளில் 60 லட்சம் வசூலித்த ப்ளூ ஸ்டார் படம் இரண்டாவது நாள் 64 லட்சம் தான் வசூலித்துள்ளது. மேலும் ப்ளூ ஸ்டார் படத்திற்கு திரையரங்குகளை அதிகரிக்கும் பணியில் படக்குழு இறங்கி உள்ளனராம்.

ஆகையால் வரும் நாட்களில் ப்ளூ ஸ்டார் படத்தின் வசூல் அதிகமாக
வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் சில வருடங்களாகவே சிங்கப்பூர் சலூன் படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சனையை சந்தித்து வந்த ஆர்ஜே பாலாஜி இப்போது இந்த படத்தின் மூலம் வசூல் மழையில் புரண்டு வருகிறார்.

Also Read : ஆர்ஜே பாலாஜியை முந்தினாரா அசோக் செல்வன்.. சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் முதல் நாள் கலெக்ஷன்

Trending News