திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

மணிமேகலை போல் அவமானப்பட்ட நடிகை.. சீரியலில் இருந்து விலகிய சிறகடிக்க ஆசை கோமதி

Vijay Tv: விஜய் டிவி டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. பக்கா தமிழ் பெண்ணான இவர் மதுரையைச் சேர்ந்தவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர் படித்து விட்டு சென்னையில் வேலைக்காக வந்தவர்.

அப்போது சின்ன சின்ன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஓவியா என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் கிடைத்த பிரசவத்தின் மூலமாக சிறகடிக்க ஆசை என்ற தொடரில் கதாநாயகியாக நடித்தார். அதுவும் இவரது மீனா கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம்.

முத்து, மீனா காம்பினேஷன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்போது சிறகடிக்க ஆசை தொடர் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது. மேலும் கோமதி பிரியா தமிழில் சிறகடிக்க ஆசை தொடரில் நடிப்பது போல மலையாளத்தில்‌ செம்பனீர் பூவே என்ற தொடரில் நடித்து வருகிறார்.

சீரியலில் இருந்து விலகிய கோமதி

இந்த தொடரும் மலையாள டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில் கோமதியின் கதாபாத்திரம் ரேவதி ஆகும். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த தொடரில் இருந்து இப்போது கோமதி விலகி விட்டதாக தனது இன்ஸ்டாவில் பதிவு போட்டிருந்தார்.

சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த தொடரில் என்னால் தொடர முடியாது என்று பதிவிட்டிருந்தார். அதன் பிறகு ஒரு கெட்டப்புடன் போட்டோ சூட் வெளியிட்ட நிலையில் செல்ப் ரெஸ்பெக்ட் ரொம்ப முக்கியம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

சமீபத்தில் இதேபோல் தான் விஜய் டிவியில் மணிமேகலை பிரியங்காவால் அவமானப்பட்டதாக கூறி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இப்படி ஒரு சம்பவம் கோமதி பிரியாவுக்கும் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக பலரும் இந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

டிஆர்பியில் பட்டையை கிளப்பும் சிறகடிக்க ஆசை

Trending News