புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கோடீஸ்வரனாக மாற பிச்சை எடுத்துப் பிழைக்கும் மனோஜ்.. உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணும் விஜயாவின் மருமகள்

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி சொல்லியதன் மூலம் மனோஜ் கனடா போவதற்கு விஜயாவிடம் பணம் கேட்டார். ஆனால் விஜயா முடியவே முடியாது. இது என்னுடைய அப்பா சொத்து. இது மேல இனி கடன் வாங்கி யாருக்கும் கொடுக்க மாட்டேன்.

உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு நாங்கள் என்ன பிளாட்பாம்லயா இருக்க முடியும் என்று தெளிவாக மனோஜிடம் பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். இதனால் நொந்து போன மனோஜ், பழையபடி பார்க்கில் இருந்த நம்பரை சந்தித்து பிரச்சினையை சொல்கிறார்.

அதற்கு அவர் உன்னை நான் கோடீஸ்வரராக ஆக்குகிறேன் என்று ஒருவரிடம் கூட்டிப் போகிறார். அதற்கு அவர் நீ செய்த பாவங்கள் தான் உன்னை இப்படி ஆட்டிப் படைக்கிறது. அதை எல்லாம் போக்க வேண்டும் என்றால் நீ கோவிலில் பிச்சை எடுக்க வேண்டும். அப்படி பிச்சை எடுத்து விட்டால் நீ கோடீஸ்வரனாக மாறி விடுவாய் என்று கூறிவிட்டார்.

படிச்ச அளவுக்கு புத்தி இல்லாத மக்கு மனோஜ்

அதன்படி கோடீஸ்வரராக ஆகிவிடலாம் என்ற நற்பாசையில் மனோஜ் கோவில் வாசலில் பிச்சைக்காரன் போல் இருந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அந்த கோவிலுக்கு வந்த மீனா எதேர்ச்சியாக மனோஜை பார்த்து விடுகிறார். உடனே முத்துவிற்கு ஃபோன் போட்டு கோவிலுக்கு வரவழைக்கிறார்.

வந்ததும் முத்து, மனோஜை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். வீட்டு வாசலில் வந்து பிச்சைக்காரன் போல நின்ன மனோஜை பார்த்த விஜயா ஆவேசமாக பிச்சைக்காரர்கள் எல்லாம் ஏன் முத்து வீட்டுக்கு கூட்டிட்டு வருகிறான் என்று அண்ணாமலையிடம் புலம்புகிறார்.

உடனே மனோஜ் அம்மா என்று கூப்பிட்டதும் விஜயா எரிச்சலுடன் திரும்பிப் பார்க்கிறார். அத்துடன் வீட்டிற்குள் நுழைந்த மனோஜ் முகத்தை காட்டி அம்மா நான் தான் மனோஜ் என்று சொன்னதும் விஜயா அப்படியே அதிர்ச்சி ஆகிவிட்டார். படிச்ச அளவுக்கு மூளை இல்லாத மக்கு மனோஜ் என்று சொல்வதற்கு ஏற்ப தான் இருக்கிறார்.

இதுல வேற ரோகிணி, இனி மனோஜை வைத்து தான் இந்த வீட்டில் ரணகளத்தை உண்டாக்க வேண்டும். அப்பொழுதுதான் நான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று பல சதி வேலையை பார்த்து வருகிறார். பொய் பித்தலாட்டம் பண்ணி வந்த ரோகினி, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணும் அளவிற்கு சூனியக்காரி ஆக மாறிவிட்டார்.

Trending News