வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜயாவை தோற்கடித்து மண்ணை கவ்வை வைத்த முத்து.. ஆட்ட நாயகனாக கலைக்கட்டும் சிறகடிக்க ஆசை

Sirakadikka Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பொங்கலை கொண்டாடுவதற்காக விஜயா குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பாட்டியின் கிராமத்திற்கு போயிருக்கிறார்கள். அங்கே ரோகிணியின் பணக்கார மாமாவை வைத்து ஒரு டிராமா போய்க் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ரோகிணி மீது முத்துவிற்கு ஒரு சந்தேகம் அதற்கு துருப்ச்சிட்டாக பிரவுன் மணி கொத்தாக மாட்டி இருக்கிறார்.

இவரை வைத்து எப்படியாவது ரோகிணியை பற்றிய உண்மைகளை கறந்து விட வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறார். அடுத்தபடியாக விஜயாவின் மூன்று மருமகள் பொங்கலை சீரும் சிறப்புமாக வைத்து முடித்து விட்டார்கள். பொங்கலில் நடக்க வேண்டிய விளையாட்டுகளை ஆரம்பிக்க போகிறார்கள்.

இதற்கு இரண்டு டீமாக பிரித்து இருக்கிறார்கள். விஜயா டீமில் ரோகினி, சுருதி, மனோஜ், ரவி இருக்கிறார்கள். இன்னொரு டீமில் முத்து, மீனா மற்றும் நண்பர் அனைவரும் சேர்ந்து இருக்கிறார்கள். இதில் பானை கட்டிவிட்டு யார் அடித்து வின் பண்றாங்க என்கிற மாதிரி ஒவ்வொருவருடைய கண்ணையும் கட்டிக்கொண்டு ஆட்டம் ஆரம்பிக்கிறது.

Also read: தர்ஷினியை கடத்தியதில் 4 கும்பல்கள் மீது ஏற்படும் சந்தேகம்.. எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் காப்பாற்றிய ஜனனியின் தோழர்

இதில் மீனா கண்ணை கட்டிக்கொண்டு பானை உடைக்கும் பொழுது மனோஜ் மண்டையிலும் போட்டு விடுகிறார். அடுத்ததாக களமிறங்கிய முத்து பானை உடைத்து விஜயாவை தோற்கடித்து மண்ணை கவ்வ வைத்து விடுகிறார். இதில் ஸ்ருதி தான் ரொம்பவே அப்செட் ஆகுகிறார். ஏனென்றால் சுருதிக்கு முத்துவை பார்த்தாலே பிடிக்கவில்லை. அதனால் அவருடைய வெற்றியை சுருதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதனை தொடர்ந்து அனைவரும் சென்னைக்கு திரும்பிய நிலையில், ரோகிணியின் மாமாவை எதார்த்தமாக முத்து பார்க்க நேரிடும். அப்பொழுதுதான் உண்மையான கலவரமே நடக்கப் போகிறது. விஜயாவின் ருத்ர தாண்டவத்தை ரோகிணி பார்க்கப் போகிறார். இப்போதைக்கு இந்த ஒரு சீரியல்தான் அனைவரது ஃபேவரிட் நாடகமாக விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

Also read: டாம் அண்ட் ஜெரியாக இருந்த ராஜிவை திருமணம் செய்த கதிர்.. பாக்யா தலைமை நடந்த ரகசிய கல்யாணம்

Trending News