Siragadikka Aasai: சினிமா ஆசையிலும் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற நினைப்பிலும் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டி விடுகின்றனர் இளம்பெண்கள். இதில் சமீபகாலமாக இளம் நடிகைகளும் சிக்குகின்றனர்.
சின்னத்திரையில் நடித்தாலும் கதாநாயகி கனவுடன் இருப்பவர்கள் இங்கு ஏராளம். அப்படித்தான் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் தோழியாக நடித்து வருகிறார் ஸ்ருதி நாராயணன்.
அவரிடம் போலி ஆசாமி ஒருவர் தன்னை இயக்குனர் என சொல்லிக்கொண்டு தன் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஆன்லைன் ஆடிஷன் நடத்தி இருக்கிறார்.
லீக் வீடியோ பின்னணி
அதன்படி வீடியோ காலில் வந்த அந்த நடிகை அவர் சொல்வதை எல்லாம் செய்து இருக்கிறார். ஆனால் நடிப்புக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
முகம் சுளிக்க வைக்கும் வகையிலான அந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய சேனல் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற போலியான நபர்களை நம்பி பலபேர் ஏமாந்து வருகிறார்கள். ஆனாலும் ஹீரோயினாக நடிப்பதற்கு எதற்கு இந்த மாதிரி செய்ய சொல்கிறார்கள் என அந்த நடிகை ஏன் யோசிக்கவில்லை.
அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோவா என்பதும் தெரியவில்லை. ஆனாலும் நடிகை யோசித்து செயல்பட்டு இருக்க வேண்டும்.
அந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் வரும் கமெண்ட்களை பார்க்கவே சகிக்கவில்லை.
இந்த சமயத்தில் அந்த நடிகையின் மனநிலை எப்படி இருக்கும் என யாரும் யோசிக்கவில்லை. காவல்துறை உடனடியாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஓவியாவின் வீடியோ ஒன்று இப்படித்தான் வைரலானது. ஆனால் அதை அவர் அசால்டாக டீல் செய்தார். ஆனால் தற்போது சம்பந்தப்பட்ட நடிகை இந்த விஷயத்தில் மௌனம் காத்து வருகிறார்.