90 களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்தவர் இசையமைப்பாளர் சிற்பி. அவரைப் பற்றி சுவாரஸ்ய தகவல்களை இதில் பார்க்கலாம்.
இயக்குனர் மனோபாலாவின் செண்பகத் தோட்டம் என்ற படம் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார் சிற்பி.
அதன்பின், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற 50க்கும் படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
அதில், கோகுலம், அன்னை வயல், நான் பேச நினைப்பதெல்லாம், கேப்டன், நாட்டாமை, உள்ளத்தை அள்ளித்தா, சுந்தரபுருஷன், மேட்டுக்குடி, மூவேந்தர், வருஷமெல்லாம் வசந்தம், கோடம்பாக்கம் உள்ளிட்ட படங்கள் ஆகும்.
90 களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் முன்ணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் படங்களுக்கு இசையமைத்து இசையில் கோலோச்சிக் கொண்டிருந்தனர்.
அப்போது இவர்களுக்கு இடையில் கானா பாடல்களுடன் விஜய், அஜித், முரளி ஆகிய நடிகர்களுக்கு பாடல் அமைத்து தேவா ஒருபுறம் அசத்திக் கொண்டிருந்தார்.
தனெக்கன் தனி ஸ்டைலில் இசையமைத்து வெற்றி பெற்ற சிற்பி!
இம்மூவரின் ஸ்டைலில் இருந்து வேறுபட்டு, சிற்பி தனக்கென தனி பாணியில் சரத்குமார், கார்த்திக், அர்ஜூன் ஆகியோர் படங்களுக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்கள் தந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
குறிப்பாக செவ்வந்தி பூவெடுத்தேன், அடி யாரது யாரது அங்கே, அனார்கலி கொஞ்சம் கேளடி, புது ரோஜா பூத்திருக்கு, அன்புள்ள மன்னவனே, யார் இந்த தேவதை, பொம்பளையக் காதலத்தான் ஆகிய பாடங்கள் ஆகும்.
97 ல் கலைமாமணி விருதைப் பெற்ற சிற்பியின் பாடல்கள் இப்போதும் ரசிகர்கள் விரும்பி கேட்கும் எவர் கிரீன் பாடல்கள் வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.