செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

வி சென்டிமென்ட்டில் இருந்து விலகிய சிறுத்தை சிவா.. சூர்யா 42 டைட்டில் இதுதான்!

சூர்யாவின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கும் சூர்யா 42 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரலாற்று பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் இப்படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தை கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பாலிவுட் நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதனாலேயே இப்படம் பல மாதங்களாகவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் இப்படத்திற்கான டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு பேசப்பட்டிருக்கிறது. இப்படி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த படத்தின் டைட்டில் மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Also read: ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த சூர்யா 42.. ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்

இதுவே சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரும் ஏக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் பட குழு இப்போது படத்தின் டைட்டிலை உறுதி செய்து விட்டார்களாம். அந்த வகையில் சிறுத்தை சிவா இப்படத்திற்காக அக்னீஸ்வரன் என்ற டைட்டிலை தேர்ந்தெடுத்திருக்கிறார். பொதுவாகவே இவருக்கு வி எழுத்தில் ஆரம்பிக்கும் டைட்டில் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகும்.

அதனாலேயே இந்த படத்திற்கு முதலில் அவர் வீர் என்ற டைட்டிலை தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் திடீரென்று என்ன ஆனதோ தெரியவில்லை தற்போது படத்தின் டைட்டிலை அக்னீஸ்வரன் என மாற்றி இருக்கிறார். கடவுள் பெயரை குறிக்கும் என்பதாலும் படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதாலும் இந்த டைட்டிலை வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தலைப்பு கிடையாது கருடா என்ற பெயர்தான் வைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியும் உலா வருகின்றது.

Also read: மேடையில் மட்டும் தான் உங்கள் சமூக நீதியா.? சிவகுமார் குடும்பத்தால் அவதிப்பட்ட மாணவர்கள்

இருப்பினும் வீர் என்ற டைட்டிலை தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் இப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அளவிற்கு உலக தரத்துடன் இப்படம் உருவாகி வருகிறது. அதனாலேயே வசூலிலும் இப்படம் மாஸ் காட்டும் என ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா 42 படத்தின் டைட்டில் டீசர் இந்த மாதம் படு மாஸாக வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பையும் பட குழு அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்க இருக்கிறார்களாம். அதை கொண்டாடுவதற்கு சூர்யா ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

Also read: சூர்யா மும்பையில் வீடு வாங்க இதுதான் காரணம்.. ஜோதிகாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

Advertisement Amazon Prime Banner

Trending News