வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கட்சியை பகச்சிக்க முடியாமல் தினரும் சூர்யா.. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் சிவக்குமாரின் தவப்புதல்வன்

Surya: சூர்யா தொடர்ந்து வெற்றியை ருசித்ததும் கொஞ்சம் தலைக்கணமும், திமிரும் தலைக்கேறி விட்டது என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறார்கள். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று சூர்யா எடுத்த ஒரு முடிவால் உணர முடிகிறது.

அதாவது சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் புறநானூறு படம் உருவாகப் போகிறது என்ற தகவல் வந்ததும் ரசிகர்களுக்கு செம ஒரு ட்ரீட்டாக இருந்தது. காரணம் இவர்கள் கூட்டணி கண்டிப்பாக வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கையில்.

ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் சூர்யா இந்த படம் இப்போதைக்கு ட்ராப் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டார். அதற்கான காரணம் என்னவென்றால் படத்தின் கதையை கொஞ்சம் வேற மாதிரி மாற்ற சொல்லி இருக்கிறார்.

அதாவது புறநானூறு படத்தின் முக்கிய கதை என்னவென்றால் ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் ஒரு அரசியல் கட்சியின் கதையாக இந்த படத்தில் காங்கிரஸ் கட்சி குறித்து சில நெகட்டிவ் கருத்துக்களை வசனமாக எழுதப்பட்டிருக்கிறதாம்.

இதை கேட்டதும் சூர்யா தற்போது இருக்கும் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியை என்னால் பகச்சிக்க முடியாது. அதனால் கதையை வேற மாதிரி மாற்றி எழுதுங்கள் என்று கூறியிருக்கிறார். உடனே சுதா கொங்கரா அந்த காட்சிகள் தான் இப்படத்தின் முக்கியமான உயிரோட்டமாக இருக்கும்.

அதையே நீக்கிவிட்டால் இப்படம் ஒண்ணுமே இல்லாமல் போய்விடும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் சூர்யா இந்த மாதிரி ஹிந்திக்கு எதிராக நான் நடிக்க விரும்பவில்லை என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார். இன்னொரு காரணம் என்னவென்றால் தற்போது மனைவி குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார்.

மனைவிக்காக சூர்யா எடுத்த முடிவு

இந்த நேரத்தில் ஹிந்திக்கு எதிராக ஒரு படத்தில் நடித்தால் அது பெரிய பிரச்சினையாகிவிடும் என்பதாலும் ஜோதிகாவுக்கு எதிராகவும் இப்படம் இருக்கும். அதனால் என்ன பண்ணுவது என்று மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்த சிவக்குமாரனின் தவப்புதல்வன் கடைசியாக எடுத்த முடிவுதான் இப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

சிவக்குமார் எதற்கெடுத்தாலும் குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், தமிழன் என்றால் இந்த மாதிரி கோட்பாடுகளை வைத்திருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாட்டுகளை போட்டு அதன்படி வாழ்ந்து வந்தார். ஆனால் இப்பொழுது இவருடைய மகன் சூர்யா கட்சியையும் பொண்டாட்டியையும் எதிர்த்து குரல் கொடுக்க முடியாது என்பதினால் கேரியரே போனாலும் பரவாயில்லை என்று இந்த முடிவை எடுத்து விட்டார்.

ஆனால் சூர்யா எடுத்த இந்த முடிவால் ரசிகர்கள் அனைவரும் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் அனைவரையும் ஏமாற்றும் விதமாக இப்படம் நிறுத்தப்பட்டு விட்டது. சூர்யாவின் கெட்ட நேரமோ என்னமோ வணங்கான், வாடிவாசல் படத்தை தொடர்ந்து தற்போது புறநானூறு படமும் கேள்விக்குறியாகிவிட்டது.

Trending News