திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஏழாம் அறிவா, காஷ்மோராவா.? கங்குவா கெட்டப்புக்காக ரிஸ்க் எடுத்த சூர்யா.. ஊறுகாய் போல் பயன்படுத்திய சிவா

Kanguva: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் கங்குவா படம் படுவேகமாக உருவாகி வருகிறது. அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.

ஒட்டு மொத்த திரையுலகையும் மிரட்டி பார்த்த அந்த வீடியோவை தொடர்ந்து தற்போது கங்குவா படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் ஒரு தகவலால் அந்த எதிர்பார்ப்பு இப்போது மரண பீதியாக மாறி இருக்கிறது.

Also read: பல கோடிக்கு கார்களை மட்டுமே குவித்து வைத்திருக்கும் சூர்யா.. ஒட்டு மொத்த சொத்து மதிப்பு

அதாவது அந்த வீடியோ காட்சியில் சூர்யாவின் தோற்றமும், அவர் அணிந்திருந்த அணிகலன்களும் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அந்த தோற்றத்திற்காகவே அவர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மேக்கப் போட்டு தயாராவாராம்.

இதற்காக தயாரிப்பு குழு அதிகபட்ச செலவையும் செய்திருக்கிறது. இப்படி மெனக்கெட்டு உருவாக்கப்பட்ட அந்த வரலாற்று காட்சிகள் படத்தில் ஒரு பகுதியாகத்தான் இடம்பெருமாம். மற்றபடி இந்த காலத்திற்கு ஏற்றவாறு சூர்யா இடம்பெறும் காட்சிகள் கோவாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

Also read: கங்குவா படத்தில் சூர்யாவை மிரட்ட வரும் கேஜிஎஃப் நடிகர்.. சரியாக தூண்டில் போட்ட சிறுத்தை சிவா

அப்படி பார்த்தால் ஏழாம் அறிவு, காஷ்மோரா, சீம ராஜா போன்ற படங்களில் வரும் ஃப்ளாஷ்பேக் போல் தான் இந்த கங்குவா காட்சிகளும் இடம்பெறும் என்று தெரிகிறது. இதனால் தான் ரசிகர்கள் இப்போது சிறுத்தை சிவாவின் மேல் உச்சகட்ட பயத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் தற்போது வெளிவந்த வீடியோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என அனைத்தும் சூர்யா இந்த தோற்றத்தில் இருப்பது போல் தான் இருக்கிறது.

அதனாலேயே படம் முழுக்க இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இப்போது வெளிவந்துள்ள தகவலால் சிறு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கஷ்டப்பட்டு நடித்த இந்த காட்சிகளை சிறுத்தை சிவா ஊறுகாய் போல் பயன்படுத்தி இருப்பது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது தான் தெரியவில்லை.

Also read: விடாமுயற்சியின் வில்லன் லிஸ்டில் இருக்கும் 5 நடிகர்கள்.. சிங்கத்தோட மோத சிறுத்தையை தேடும் மகிழ்

Trending News